Onetamil News Logo

விடியுமா?....மழை நீர் வடியுமா? கோக்கூர் கம்மாய் கதிர்வேல் நகராக மாறியதால் தான் இன்றும் மழை நீர் அந்த இடத்தை விட்டு அகலவில்லை ;பொதுமக்கள் அவதி 

Onetamil News
 

விடியுமா?....மழை நீர் வடியுமா? கோக்கூர் கம்மாய் கதிர்வேல் நகராக மாறியதால் தான் இன்றும் மழை நீர் அந்த இடத்தை விட்டு அகலவில்லை ;பொதுமக்கள் அவதி       


தூத்துக்குடி 2021 ஜனவரி 15;தூத்துக்குடியில் தொடர்ந்து 3-வது நாளாக மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது இதனால் முக்கிய சாலைகள், குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வடகிழக்கு பருவமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாநகரில் ஏற்கனவே பெய்த மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி கிடந்தது. தற்போது மீண்டும் 3 நாட்களாக தொடர்ச்சியாக சாரல் மழை பெய்து வருகிறது. அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது. இதனால் மக்கள் மீண்டும் தண்ணீரில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. 
தூத்துக்குடியில் பல்வேறு குளங்கள் ஆங்காங்கே இருந்ததாக வரலாறு கூறுகிறது. ஆனால் இன்று அந்த குளங்கள் காணாமல் போய் அனைத்தும் பட்டா நிலங்கள் வீடுகளாக மாறி விட்டது. இந்த சூழ்நிலையில் கோக்கூர் கம்மாய் பகுதியானது பட்டா போடப்பட்டு அன்றைய காலகட்டங்களில் சென்ட் பத்தாயிரம் ரூபாய்க்கு கதிர்வேல் நகராக மாறியது .விற்கப்பட்டது இன்று அந்த பகுதி குளமாகவே கம்மாய் ஆகவே காட்சியளிக்கிறது அந்த அளவுக்கு மழை நீர் அவ்விடத்தை விட்டு நகராமல் பல நாட்களாக இருக்கிறது. தொடர்ந்து மூன்று நாட்களாக பெய்த மழை அந்தப்  பகுதியில் சூழ்ந்து உள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள குடிசை மக்கள் நடுத்தர மக்கள் போன்றோர் இருசக்கர வாகனங்களிலும்,கார்களிலும் வெளியே வரமுடியவில்லை, மிகவும் சிரமமான ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.விடியுமா?....மழை நீர் வடியுமா?
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo