Onetamil News Logo

 மணக்கரையில் காசநோய் விழிப்புணர்வு தேசிய ஊட்டச்சத்து மாத விழா     

Onetamil News
 

 மணக்கரையில் காசநோய் விழிப்புணர்வு தேசிய ஊட்டச்சத்து மாத விழா     


வல்லநாடு 2019 செப் 10 ;மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் வழிகாட்டுதல் மற்றும் துணை இயக்குநர், மருத்துவப் பணிகள் (காசநோய்) டாக்டர்.க.சுந்தரலிங்கம் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய்; தடுப்புத் திட்டம் (RNTCP)  தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு காசநோய் பிரிவு சார்பாக செப்டம்பர் மாதம் முழுவதும் ‘காசநோய் விழிப்புணர்வு தேசிய ஊட்டச்சத்து முகாம்கள்” (Nikshay Poshan Yojana-Poshan Maah - நிக்ஷை போஷன் யோஜனா - போஷன் மா) கருங்குளம் யூனியனுக்கு உட்பட்ட பகுதிகளில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.மு.சுந்தரி அவர்கள் மேற்பார்வையில் நடத்தப்பட்டு வருகிறது.
இதனடிப்படையில் பள்ளி மாணவ, மாணவியர்களிடையே காசநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் தேசிய ஊட்டச்சத்து மாத விழா மணக்கரை TNDTA நடுநிலைப் பள்ளியில் வைத்து 10.09.2019 அன்று முற்பகல் 10.30 மணியளவில் துணை இயக்குநர் மருத்துவப் பணிகள், (காசநோய்) டாக்டர்.க.சுந்தரலிங்கம்  தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.மு.சுந்தரி முன்னிலை வகித்தார்கள்
பள்ளியின் தலைமை ஆசிரியை ஜெ.மேரி விக்டோரியா பியட்ரிஸ் வரவேற்புரை ஆற்றினார்.
இயற்கை உணவு கண்காட்சியை துவக்கி வைத்த துணை இயக்குநர் மருத்துவப் பணிகள், (காசநோய்) டாக்டர்.க.சுந்தரலிங்கம் அவர்கள் பேசுகையில் இந்தியாவில் காசநோயினால் 5 நமிடத்திற்கு 2 பேர் மரணிப்பதாகவும், எச்.ஐ.வி. பாதிப்பு உள்ளோர், சர்க்கரை நோயாளிகள், இட நெருக்கடியில் வசிப்பவர்கள், குழந்தைகள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளோர்கள் ஆகியோர்களுக்கு காசநோய் ஏற்பட அதிகம் வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார்கள்.
இன்று கணினி உலகில் காலம் மாறிக் கொண்டே போவது போன்று நாமும் அதற்கு தகுந்தாற்போல மாறிக் கொண்டே வருகிறோம்.  இந்த மாற்றத்தால் முன்னோர்கள் கற்றுதந்துள்ள வாழ்க்கை முறைகளையும், உணவு பழக்க வழக்கத்தையும் முற்றிலுமாக மாற்றிக் கொண்டோம்.  நோய் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதை மாணவ, மாணவிகளான நீங்கள் உணர்ந்து கொண்டு கீரைகள், கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற சத்தான உணவுகளை உண்டு ஆரோக்கியமாக வாழ்வோம் என்பதை உறுதிமொழியாக ஏற்று நலமுடம் வாழ்ந்திட வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர்களுக்கு காசநோய் விழிப்புணர்வு குறித்த வினாடி வினா போட்டி நடைபெற்றது.இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை துணை இயக்குநர் டாக்டர்.க.சுந்தரலிங்கம், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.மு.சுந்தரி ஆகியார்கள் வழங்கினார்கள்.
இறுதியாக ஆசிரியை பிரின்ஸி பியுலா  நன்றி கூறினார்.  நிகழ்ச்சியினை முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அ.அப்துல் ரஹீம் ஹீரா  தொகுத்து வழங்கினார்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட தீர்வு முறை அமைப்பாளர் ச.குப்புசாமி, அரசு மற்றும் தனியார் துறை ஒருங்கிணைப்பாளர் பா.மோகன், சமுதாய சுகாதார செவிலியர் சாந்தகுமாரி,  பள்ளியின் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     ஏற்பாடுகளை மாவட்ட காசநோய் மையம், வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் சித்த மருத்துவ பிரிவு இணைந்து செய்திருந்தது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo