Onetamil News Logo

தூத்துக்குடி கோர்ட் அருகே நடந்த சிவா என்ற சிவக்குமார் கொலைவழக்கில் 17 பேர் கைது ;பரபரப்பு 

Onetamil News
 

தூத்துக்குடி கோர்ட் அருகே நடந்த சிவா என்ற சிவக்குமார் கொலைவழக்கில் 17 பேர் கைது ;பரபரப்பு 


தூத்துக்குடி,2019 ஆக.22: தூத்துக்குடி கோர்ட் அருகே பழிக்குப்பழியாக இளைஞரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் அருகில் வழக்கறிஞரின் தம்பி குத்தியும் வெட்டியும்  படுகொலை செய்யப்பட்டார்.இதில்  கொலையாளிகள் பைக்-யில் தப்பி சென்றனர்.  
தூத்துக்குடி சோரீஸ்புரம் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் தனது தம்பி சிவா என்ற சிவக்குமார் (41) ,என்பவருடன் வழக்கு விஷயமாக இறுதித்தீர்ப்புக்காக இன்று நீதிமன்றம்,வந்துகொண்டிருந்தார்.
தூத்துக்குடி அய்யனடைப்பை சேர்ந்தவர் பச்சைக்கண்ணன். இவருடைய மகன் சிவா என்ற சிவகுமார் (வயது 41). இவர் தற்போது நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் டார்லிங் நகரில் வசித்து வந்தார். அங்கு ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். கடந்த 2005-ம் ஆண்டு தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியில் ஆத்திப்பழம் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் சிவகுமார் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தார். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
நேற்று இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை நடந்தது. இதில் ஆஜராவதற்காக சிவகுமார் பாளையங்கோட்டையில் இருந்து காரில் தூத்துக்குடிக்கு வந்தார்.
தூத்துக்குடி-திருச்செந்தூர் ரோட்டில் தென்பாகம் போலீஸ் நிலையம் அருகே உள்ள தனது அண்ணன் வக்கீல் முத்துக்குமாரின் அலுவலகத்துக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து மற்றொரு அண்ணன் ராம்குமாருடன் தென்பாகம் போலீஸ் நிலையத்துக்கு பின்புறம் கோர்ட்டுக்கு செல்லும் கேட் வழியாக செல்வதற்காக ரோட்டை கடந்து சென்றார். அவர் அந்த கோர்ட்டு கேட் அருகே சென்றபோது, அந்த பகுதியில் ஆங்காங்கே நின்று கண்காணித்துக் கொண்டு இருந்த மர்ம கும்பல் ஓடி வந்து சிவகுமாரை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது. பின்னர் அவர்கள் பைக்-யில் தப்பி சென்றனர்.  இதில் பலத்த காயம் அடைந்த சிவகுமார் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உடனடியாக சிவகுமார் மீட்கப்பட்டு தூத்துக்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் பரிதாபமாக இறந்தார்.
ஆத்திப்பழம் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப்பழியாக ஆத்திபழத்தின் தம்பி ராஜேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் 10-க்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து சிவகுமாரை கொலை செய்ததாக கூறப்படுகிறது.ரியல் எஸ்டேட் அதிபர் பழிக்குப்பழியாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
இந்த கொலைவழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் சென்னையில் மளிகை கடையில் வேலைபார்த்து வரும் ஸ்ரீவைகுண்டம் மாசிலாமணிபுரத்தைச் சேர்ந்த மூக்கன் மகன் கந்தவேல் (23), முள்ளக்காடு காந்தி நகரைச் சேர்ந்த பொன்முருகன் மகன் பாலசுப்பிரமணியன் (26), தூத்துக்குடி அண்ணா நகர் 3வது தெருவைச் சேர்ந்த பூபேஸ் கண்ணன் (27), கோரம்பள்ளம் வங்கித்  தெருவைச் சேர்ந்த முருகசெல்வம் மகன் விக்னேஷ் (23), பேரூரணியைச் சேர்ந்த முருகன் மகன் மருதவேல் என்ற பப்படை (27), குலையன்கரிசல் கீழத்தெருவைச் சேர்ந்த பட்டுலிங்கம் மகன் சத்யராஜ் (25), தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் ,தூத்துக்குடி ஹவுசிங் போர்டு கொத்தனார் காலனியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் தங்கம் (21)  தூத்துக்குடி அண்ணா நகர் 2வது தெருவைச் சேர்ந்த சுடலையாண்டி மகன் வேல்சங்கர் (26), அத்திப்பாண்டி மகன் ராசுக்குட்டி என்ற கணகராஜ் (24), பட்டுராஜ் மகன் வெங்கடேஷ்வரன் (30), கோரம்பள்ளம் பிஎஸ்பி நகர் ஜேசுபாலன் மகன் பீட்டர் (24), நட்டாத்தி கிராமத்தைச் சேர்ந்த கடற்கரை மகன் பொன் சரவணபெருமாள் (27), இந்த காெலை தொடர்பாக நெல்லை மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் 5 ல் நீதிபதி நிஷாந்தினி முன்பு தூத்துக்குடி கோரம்பள்ளத்தை சேர்ந்த ஜெயராஜ் மகன்  ராஜேஷ் (29), அண்ணாநகர் ஜோதி பாஸ்கர் மகன்  சங்கரமூர்த்தி (26) , கேவிகே நகர் கருப்பசாமி மகன் பாலசுப்பிரமணியம் (25), யாதவர் தெருவை சேர்ந்த முருகன் மகன் செல்வகுமார் (24) ஆகிய 4 பேர் சரண் அடைந்துள்ளனர். மொத்தம் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo