Onetamil News Logo

தமிழ்நாடு கடல்சார் பயிற்சிக் கழக முதல்வர் எம். முத்துக்குமார்  அறிக்கை 

Onetamil News
 

தமிழ்நாடு கடல்சார் பயிற்சிக் கழக முதல்வர் எம். முத்துக்குமார்  அறிக்கை 


தூத்துக்குடி 2019 நவம்பர் 13 ; தூத்துக்குடியில் இயங்கிவரும் தமிழ்நாடு கடல்சார் பயிற்சிக் கழகத்தில் பொது முறை மாலுமி பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இது ஒரு தமிழக அரசு பயிற்சி நிறுவனம் ஆகும். இந்த பயிற்சியில் சேர்வதற்கு தகுதியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் ஆங்கிலத்தில் 40 சதவீதத்திற்கு மேலும் வயது 18 முதல் 25 வரைக்கும் இருக்க வேண்டும். பாஸ்போர்ட் கட்டாயம் தேவை அல்லது பாஸ்போர்ட் விண்ணப்பித்து இருக்கவேண்டும் .வயது வரம்பில் எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு ஐந்து வருடம் சலுகை வழங்கப்படும் மற்றும் டிகிரி அல்லது டிப்ளமோ படித்திருந்தால் இரண்டு வருடங்கள் சலுகை அளிக்கப்படும். இந்த பயிற்சியானது ஒவ்வொரு வருடமும் ஜனவரி முதல் தேதி மற்றும் ஜூலை முதல் தேதிகளில் தொடங்கி ஆறு மாதங்கள் நடைபெறும். இந்தப் பயிற்சி முடித்தவர்கள் கப்பலில் பொதுத்துறை மாலுமியாக வேலைக்குச் செல்லலாம் இந்த விண்ணப்பங்கள் 22. 11 .2019 வரை வழங்கப்படும் மேலும் விவரங்களுக்கு www.tn.gov.in/tnma என்ற இணையதளத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம் அல்லது 04612320075 , 0461 2 3 2 00 7 6 என்ற தொலைபேசியில் தொடர்புகொண்டு விவரங்கள் பெறலாம்
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo