Onetamil News Logo

மதுவின் பிடியிலிருந்து குடும்பங்களையும் குழந்தைகளையும் காப்போம் என்ற முழக்கத்தோடு தமிழக மது ஒழிப்பு இயக்கங்களின் கூட்டமைப்பு தமிழகம் முழுவதுமாக 16 நாட்கள் பிரச்சாரம்

Onetamil News
 

மதுவின் பிடியிலிருந்து குடும்பங்களையும் குழந்தைகளையும் காப்போம் என்ற முழக்கத்தோடு தமிழக மது ஒழிப்பு இயக்கங்களின் கூட்டமைப்பு தமிழகம் முழுவதுமாக 16 நாட்கள் பிரச்சாரம்


மதுரை 2019 நவம்பர் 30 ;தமிழக மது ஒழிப்பு இயக்கங்களின் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்.வழக்கறிஞர்.சி.சே.இராசன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக மது ஒழிப்பு இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில்  பெண்கள் மீதான வன்முறை எதிர்ப்பு  தினமான நவம்பர் 25 அன்று "மதுவின் பிடியிலிருந்து குடும்பங்களையும் குழந்தைகளையும் காப்போம்"என்ற முழக்கத்தை தாங்கி தமிழக அளவில் நவம்பர் 25 முதல் டிசம்பர் 10 வரை பிரச்சாரம் துவக்கப்பட்டுள்ளது. துவக்கவிழா சென்னையில் மது ஒழிப்பு இயக்கங்களின் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர்.சி.சே.இராசன் தலைமையில் நடைப்பெற்றது.பிரச்சார இயக்கத்தை தமிழக மது ஒழிப்பு இயக்கங்களின் கூட்டமைப்பு ஆலோசகரும், சுய ஆட்சி இந்தியா கட்சியின் தேசிய துணைத்தலைவருமான கிறிஸ்டினா சாமி துவக்கிவைத்தார். தேன்சுடர் பெண்கள் இயக்கம் கருத்தம்மாள்,விதவை பெண்கள் வாழ்வுரிமை சங்கம்.புஷ்பா  ,தமிழக பெண்கள் கூட்டமைப்பு உதயகுமாரி ஆகியோர் கருத்துரை ஆற்றினர்.
பிரச்சார இயக்கத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் மகிளா காங்கிரஸ் மாநில தலைவர்.ஜான்சி, தி.மு.க கட்சியின் மாநில செய்தி தொடர்பு இணைச்செயலாளர். பேரா.கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், சுய ஆட்சி இந்தியா கட்சியின் மாநில தலைவர்.பாலகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இப்பிரச்சாரம் குறித்து தமிழக மது ஒழிப்பு இயக்கங்களின் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.சே.இராசன் கூறும் பொழுது மது அருந்தும் பழக்கமுள்ள ஒருவர் மதுவிற்கு அடிமையாகி மது நோயாளியாகும் போது அவர் குடும்பத்திற்கும்,சமூகத்திற்கும் பயனில்லாதவராகவும், இடையூராகவும், பாரமாகவும் ஆகின்றார்.இதன் விளைவாக ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்கும் அந்த குடும்ப உறுப்பினர்களும் ஒருவகையான நோயாளிகளாகி விடுகின்றனர்.தனிநபர்களும்,
குடும்பங்களும் சமூகத்தின் நோய்வாய்ப்பட்ட அங்கங்களாக மாற்றப்படுவதற்கு அரசின் தவறான கொள்கையை காரணம்.
தமிழகத்தில் பள்ளி மாணவர்கள்இளைஞர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் மது மற்றும் போதை பழக்கத்திற்கு ஆளாக்கப்படுகின்றனர்.மது அருந்தி ஏற்படும் விபத்து,இளம் விதவைகள் போன்ற சமூக அவலங்களின் பட்டியலில் தமிழகம் இன்றைக்கு முதலிடம் வகிக்கின்றது.

கொலைகொள்ளை,பெண்கள் மற்றும் பெண்குழந்தைகள் பாலியல் வல்லுறவு கொலைகள் என குற்றங்கள் அதிகரிப்பதற்கு மது முக்கிய காரணமாகிறது.இதற்கு முற்றுப்புள்ளி வைத்தால்தான் குடும்பங்களையும் குழந்தைகளையும் பாதுகாக்க முடியும்.மனித மாண்புடன் பெண்கள் வாழ முடியும் என்றார்.
மது விற்பனையை ஏற்று நடத்தும் தமிழக அரசுதான் இந்த சமூக அழிவிற்கு தார்மீக பொறுப்பேற்க வேண்டும்.குடி நோயாளிகள் தமிழகத்தில் அதிகமாகி இருப்பதால் தமிழகத்தில் உள்ள அனைத்து சுகாதார மையங்களிலும் மறுவாழ்வு மையங்கள் உருவாக்க வேண்டும்.அங்கு சிகிச்சைப் பெறும் குடிநோயாளி குடும்பங்களுக்கு சிகிக்சை காலங்களில் உதவி தொகை வழங்க வேண்டும்.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடைகளை விட சட்டவிரோத சந்துகடைகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. படிப்படியாக மதுக்கடைகளை மூடிவிடுவோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த தமிழக அரசு சத்துக்கடைகளை விரட்டியடித்து,டாஸ்மார்க் கடைகளை இழுத்து மூடி பூர்ண மதுவிலக்கை தமிழகத்தில் அமுல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்திதான் தமிழகம் முழுவதும் பிரச்சாரமும் தேனி,கரூர்,திண்டுக்கல்,வேலூரில் கண்டன ஆர்பாட்டங்களும்,நாகர் கோவிலில் ஊர்வலமும்,திருச்சியில் கல்லுரி மாணவர்கள் மத்தியில் பிரச்சாரமும் ,மற்ற மாவட்டங்களில் கண்டன கூட்டங்கள் என பிரச்சாரம் தொடர்ந்து  கொண்டிருக்கிறது.டிசம்பர்10 மனித உரிமை தினம் வரை விழிப்புணர்வு பிரச்சாரங்களை  கொண்டு செல்கிறோம்.மக்கள் மத்தியில் இப் பிரச்சாரம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது  என்றார்‌.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo