Onetamil News Logo

திமுகவை கண்டித்து  தூத்துக்குடியில் பட்டியலின மக்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் 

Onetamil News
 

திமுகவை கண்டித்து  தூத்துக்குடியில் பட்டியலின மக்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடி 2020 ஜூன்  1 ; உயர் பதவியில் உள்ள பட்டியல் இன மக்களை தொடர்ந்து இழிவாக பேசி வரும் திமுகவை கண்டித்தும் அதை ஊக்குவிக்கின்ற வகையில் கட்சி நிர்வாகிகளை கட்டுப்படுத்த தவறிய திமுக தலைவர் சட்டமன்ற தமிழக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினை கண்டித்தும் தூத்துக்குடியில் பட்டியலின மக்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், ஏரல், திருச்செந்தூர், சாத்தான்குளம் உள்ளிட்ட 5 தாலுகாக்களில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை கண்டித்தும், பட்டில் இன மக்களை இழிவாக பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனை கண்டித்தும் இவர்களது இழிவான பேச்சுக்களை கட்டுப்படுத்த தவறிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்-ஐ கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் தனிமனித இடைவெளிவிட்டு நின்று கண்டன கோஷம் எழுப்பினர்.இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக மாவட்ட தொழிற்சங்க செயலாளர் டேக் ராஜா, மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை பொருளாளர் முன்னாள் கவுன்சிலர் ஜெ. தனராஜ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாக குழு உறுப்பினர் ஆறுமுக நயினார், மாவட்ட பிரதிநிதி வக்கீல் முனியசாமி, வலசை வெயிலுமுத்து, பகுதி இணைச்செயலாளர் சண்முகத்தாய், போல்டன்புரம் அருண், டைமன் ராஜ், மற்றும் பட்டியல் இனத்தைச் சார்ந்த என்.ஆர்.செல்வம், சிவலிங்கம், மாரிராஜ், துர்க்கை முத்து, சதீஷ்குமார், சிவகுமார், ஜெய்சங்கர், ஜெயந்தன், ராஜ், கதிர்வேல், ஜேசு, ரவி மாரியப்பன் உட்பட பலர் இருந்தனர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதியை கண்டித்தும், பட்டில் இன மக்களை இழிவாக பேசிய தயாநிதி மாறனை கண்டித்தும், இவர்களை கட்டுப்படுத்தாத திமுக தலைவர் 
மு.க.ஸ்டாலின் அவர்களை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது..ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் தனிமனித இடைவெளிவிட்டு நின்றனர்.

 
--
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo