Onetamil News Logo

தி.மு.க.வுக்கு எங்கள் ஒட்டு இல்லை' தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி இந்துக்கள் என அச்சகத்தின் பெயர், தொடர்பு கொள்ள தொலைபேசி, கைபேசி எண்கள் எதுவும் குறிப்பிடாமல் சுவரொட்டிகள் ;எஸ்பியிடம் புகார்     

Onetamil News
 

தி.மு.க.வுக்கு எங்கள் ஒட்டு இல்லை' தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி இந்துக்கள் என அச்சகத்தின் பெயர், தொடர்பு கொள்ள தொலைபேசி, கைபேசி எண்கள் எதுவும் குறிப்பிடாமல் சுவரொட்டிகள் ;எஸ்பியிடம் புகார்     


தூத்துக்குடி 2019 ஏப்ரல் 12 ;தி.மு.க.மாநில பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பு வகித்து வரும் பரிவள்ளி கோட்டை கிராமத்து ராஜா என்பவர் தூத்துக்குடி எஸ்.யிடம் புகார் வழங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் வழங்கியுள்ள புகாரில் கூறியதாவது....  
எனக்கு சொந்த கிராமம் பரிவள்ளி கோட்டை நான் தி.மு.க.வில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பு வகித்து வருகிறேன். ஏற்கனவே தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி துணை தலைவராக இருந்துள்ளேன்.
தற்போது வருகிற 18.04.2019 அன்று பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை ஒட்டி தி.மு.க.வின் சார்பில்  திருமிகு. கனிமொழி கருணாநிதி அவர்கள் வேட்பாளராக நிறுத்தப்பட்டு வாக்கு சேகரித்து வருகிறார்.
இந்நிலையில் 'இந்து மத கடவுளை போற்றுபவருக்கே எங்கள் ஓட்டு இந்துமதத்தின் ஒப்பற்ற தெய்வமான ஸ்ரீகிருஷ்ணரை இழிவாக பேசிய தி.க. வீரமணி வழிவந்த தி.மு.க.வுக்கு எங்கள் ஒட்டு இல்லை' தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி இந்துக்கள் என அச்சகத்தின் பெயர், தொடர்பு கொள்ள தொலைபேசி, கைபேசி எண்கள் எதுவும் குறிப்பிடாமல் சுவரொட்டிகள் அச்சிடப்பட்டு தொகுதி முழுவதிலும் பரவலாக ஒட்டப்பட்டுள்ளது.
தூத்துக்குடி தொகுதியில் இந்து – கிருஸ்தவர் – முஸ்லீம் என எவ்வித பாகுபாடுமின்றி சகோதர நேயத்தோடு பழகி வரும் நிலையில் மேற்படி சுவரொட்டியில்கண்டுள்ள வாசகங்கள் மத உணர்வுகள் தூண்டி விட்டு அதன் மூலம் கலவரங்களை ஏற்படுத்தி பொதுமக்களின் அமைதியான வாழ்வினை கெடுக்கும் கெட்ட எண்ணத்துடன் அச்சிடப்பட்டுள்ள ஒன்றாகும்.
தற்போது தி.மு.க. வேட்பாளரை எப்படியாவது குறை சொல்ல வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தினால் பா.ஜ.க. வேட்பாளரான  தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களின் தூண்டுதலின் பெயரிலேயே சுவரொட்டிகள் அச்சிடப்பட்டு தொகுதி முழுவதும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
தேர்தலுக்காக மட்டுமின்றி அதன்பின்னரும் அமைதியான இப் பூமியில் (தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி) சுவரொட்டி வாசகங்களால் மத கலவரங்கள் வருவாகி பெரிய தொரு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. 
எனவே தாங்கள் இப்புகாரை தேர்தல் கால புகாராக மட்டும் கருத்தில் கொள்ளாது பொது மக்களின் இயல்பு வாழ்க்கையினை பாதிப்படையச் செய்வதோடு வீண் கலவரங்களை (மதரீதியாக) தூண்டி விடும் வகையில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியை அச்சிட்டு ஒட்டச் செய்த பா.ஜ.க. வேட்பாளர் திருமதி. தமிழிசை சௌந்தர்ராஜன் விதிகளை மீறி அச்சிட்ட அச்சகத்தாழ் மற்றும் தொகுதி முழுவதும் ஒட்டிய நபர்கள் ஆகிய அனைவர் மீதும் தக்க நடவடிக்கை அதில் கூறியுள்ளனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo