Onetamil News Logo

மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,கலந்து கொண்டு 36 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.84 இலட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்களை வழங்கினார்.

Onetamil News
 

மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,கலந்து கொண்டு 36 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.84 இலட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்களை வழங்கினார்.


தூத்துக்குடி 2020 ஜனவரி  24 ;தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,கலந்து கொண்டு 36 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.84 இலட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்களை வழங்கினார்.
தூத்துக்குடி பத்திநாதபுரம் நற்செய்தி நடுவம் லூசியா மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, கலந்து கொண்டு 36 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.84 இலட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்களை வழங்கினார். அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,மாற்றுத்திறனாளிகள் பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டு, பரிசுகளை வழங்கினார். 
விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, பேசியதாவது:- 
மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது. சக்கர நாற்காலி மற்றும் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்களும் அரசின் ஒதுக்கீட்டின் மூலம் வழங்கப்பட்டாலும், கூடுதலாக தேவைப்படுவோர்களுக்கு பல்வேறு கார்ப்ரேட் நிறுவனங்களின் சி.எஸ்.ஆர் நிதியின் மூலமும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கென பல்வேறு கடன் உதவி திட்டங்களும் உள்ளது. எவ்வித ஆவணமுமின்றி ரூ.1 இலட்சம் வரையிலான கடன் உதவி திட்டத்தில் ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால் போதும் அவர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கி கடன் உதவிகளும் வழங்கிட ஆவணம் செய்யப்படும். மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 12 மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைந்து நடத்தும் டிரீம் கிச்சன் ஹோட்டல் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இது போன்று மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைந்து  தொழில் செய்ய முன்வந்தால் அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும். வரும் மார்ச் மாதம் மாற்றுத்திறனாளிகளுக்கென மெகா தனியார் வேலைவயாப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இம்முகாமில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெற வேண்டும். 

மாற்றுத்திறனாளிகளுக்கென தேசிய அளவில் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இந்த தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டையை அனைத்து மாற்றுத்திறனாளிகளும் கிராம ஊராட்சி அலுவலகங்களின் மூலம் 3.2.2020 முதல் 7.2.2020க்குள் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள பதிவு செய்ய வேண்டும். ஏற்கனவே விண்ணப்பித்துள்ளவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசினார். 
இவ்விழாவில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கே.பி.பிரமநாயகம், லூசியா மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி அருட்பணி.கிராஸஸ் மைக்கேல், செவித்திறன் மற்றும் பேச்சு பயிற்சியாளர் கி.இராஜேஸ்வரி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo