Onetamil News Logo

தூத்துக்குடியில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குச்வாடி அலுவலர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் ;கலெக்டர் பங்கேற்பு

Onetamil News
 

தூத்துக்குடியில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குச்வாடி அலுவலர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் ;கலெக்டர் பங்கேற்பு



தூத்துக்குடி 2019 மார்ச் 15 ; தூத்துக்குடி மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குச்வாடி அலுவலர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் மாவட்டஆட்சித்தலைவர் / மாவட்டதேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி, தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடிமாவட்டஆட்சியர் அலுவலகத்தில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குச்வாடி அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்டஆட்சித்தலைவர் / மாவட்டதேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி,  தலைமையில் இன்று (15.03.2019) நடைபெற்றது.
கூட்டத்தில்,மாவட்டஆட்சித்தலைவர் / மாவட்டதேர்தல் அலுவலர்  பேசியதாவது:-
நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவிற்கு முன்தினமே வாக்குச்சாவடியில்; போதுமான இடவசதி, வாக்காளர்கள் உள்ளே நுழையவும், வெளியேவரவும் தனித்தனி வழிகள், இரு நுழைவாயில் மட்டும் இருந்தால் நடுவில் ஒருகயிற்றைகட்டி தனித் தனிவழிகள் ஏற்படுத்தி கொள்ளவேண்டும். உள்ளே,வெளியே எனஅட்டைகள் பொருத்தவேண்டும். வாக்குச்சாவடிக்குள் எந்தஒருஅரசியல் தலைவரின் படம் இருந்தாலும் அதனை அப்புறப்படுத்த வேண்டும் அல்லது அதனை முழுமையாக மூடிவிடவேண்டும். வாக்குப்பதிவு இயந்திரங்களை கண்டிப்பாக தரையில் வைக்க கூடாது. மேஜையின் மீது தான் வைக்கப்படவேண்டும். வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடிக்கு வெளியே வாக்குச்சாவடியில் அடங்கும் பகுதிகள் மற்றும் அங்குவாக்களிக்கும் வாக்காளரின் விபரம் அடங்கிய அறிவிப்பை அனைவருக்கும் நன்கு தெரியும் வகையில் ஒட்டவேண்டும். வாக்குச்சாவடியின் 100 மீட்டர் சுற்றளவுக்குள் எந்தவிதமான அரசியல் விளம்பரங்களோ, 200 மீட்டர் சுற்றளவுக்குள் சாமியானா உள்ளிட்ட எவ்வித பந்தல்களோ அமைக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 1 மணிநேரத்திற்கு முன்னதாக ஒத்திகை வாக்குப்பதிவு நடத்தவேண்டும். Control Unit-ல் உள்ளளுறவை Switch“ON-ல் இருப்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும். பிறகு வாக்காளர் ஒப்புகைசீட்டு இயந்திரத்தில் (VVPAT)-ல் உள்ளமேற்படி 50 ஆழMock Poll Slipகளை வெளியே தனியாக எடுத்து மேற்படி Slip களுக்கு பின்புறம் Mock Poll Slip என்ற Rubber Stamp Seal வைக்கப்படவேண்டும். பின்னர் மேற்படி 50 Slip களையும் அதற்குரிய Cover-ல் வைத்து சீலிடவேண்டும். பின்னர் Control Unit Switch-ஐ செய்து வாக்களிப்பிற்கு தயார் செய்யவேண்டும். மண்டல அலுவலர்கள் மேற்படி Mock Poll நடை பெற்றதை 30 நிமிடங்களுக்குள் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களை தொடர்பு கொண்டு உறுதிசெய்து கொள்ள வேண்டும்.
குறித்த நேரத்தில் வாக்குப்பதிவு ஆரம்பிக்க வேண்டும். வாக்குச்சாவடிக்குள் வாக்காளர்கள் நுழைவதை காவலரின் உதவியுடன் முறைப்படுத்தவேண்டும். புகைப்படம் / வீடியோ எடுக்க தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்றவர்களை தவிரவேறு எவரும் புகைப்படம் / வீடியோ எடுக்க அனுமதிக்க கூடாது. 17A பதிவேட்டில் வாக்காளரின் பாகம் எண்,வரிசை எண், அடையாள அட்டைஎண் போன்ற விபரங்களை எழுதி அவரது கையொப்பம்/ இடது கை பெருவிரல் ரேகையை பெற்றுக்கொண்டு துண்டு சீட்டில் வாக்காளரின் விபரத்தை எழுதி அவரிடம் வழங்க வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து இடைத்தேர்தல் நடைபெறும் சட்டமன்றதொகுதிகளில் உள்ளவாக்குச் சாவடிகளில் ஒவ்வொருவாக்குச் சாவடிக்கும் 1 10 5என்றமுறையில் ஒரு தலைமை வாக்குச்சாவடி அலுவலர் மற்றும் 5 வாக்குசாவடிஅலுவலர்கள் இருப்பார்கள்.  முதல் நிலைஅலுவலர் வரக்கூடிய வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் அடையாளம் கண்டு சத்தமாக பெயரைவாசிக்கவேண்டும். இரண்டாம் நிலைஅலுவலர் அழியாதமையைவைப்பதுமற்றும் வாக்காளர் பதிவேடு (17A) பராமரிக்க வேண்டும். மூன்றாம்நிலை அலுவலர் வாக்காளர்களுக்கு வாக்காளர் ரசீது அளிக்கவேண்டும். நான்காம் நிலைஅலுவலர் நாடாளுமன்ற தேர்தலுக்குரிய Control Unit வை -க்கு பொறுப்பாவார். வாக்குச்சாவடி தலைமை அலுவலர் வாக்குச்சாவடிக்கு முழு பொறுப்பு ஆவார். 1200 வாக்காளர்களுக்குமேல் உள்ள வாக்கு சாவடிகளுக்கு ஒரு வாக்குச்சாவடி அலுவலர் கூடுதலாக நியமிக்கப்படுவார். எனவே,அனைத்து அலுவலர்களும் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளைஎனமாவட்டஆட்சித்தலைவர் / மாவட்டதேர்தல் அலுவலர்  பேசினார்.
கூட்டத்தில் ,தூத்துக்குடி மாநகராட்சிஆணையர் வீ.ப.ஜெயசீலன், .,மாவட்டவருவாய் அலுவலர் டாக்டர் மு.வீரப்பன், தூத்துக்குடிசார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங்கலோன்,.,உதவிஆட்சியர் (பயிற்சி) மரு.அனு,  மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo