Onetamil News Logo

எஸ்.ஆர் சரவணபெருமாள் 3 வது ஆண்டு நினைவு அஞ்சலி கூட்டம் ;பாஜக கூட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்.!

Onetamil News
 

எஸ்.ஆர் சரவணபெருமாள் 3 வது ஆண்டு நினைவு அஞ்சலி கூட்டம் ;பாஜக கூட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்.!


தூத்துக்குடி 2020 பிப்ரவரி 21 ;பாஜக மாநில முன்னாள் பொது செயலாளர் எஸ்ஆர் சரவணபெருமாள் 3 வது ஆண்டு நினைவு அஞ்சலி கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பி.எம்.பால்ராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர் பாலாஜி, மாவட்ட துணைத்தலைவர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம், வர்த்தக அணி தலைவர் ராஜகண்ணன், தேசிய குழு உறுப்பினர் வழக்கறிஞர் சந்தனகுமார், நிர்வாகிகள் ரவிச்சந்திரன், சிவராமன் மற்றும் அத்திமரப்பட்டி இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது: 
எனக்கும், எஸ்.ஆர். சரவணபெருமாளுக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் இருக்கும். ஆனால் ஒன்றாகவே செயல்படுவோம். அவரிடம் உள்ள கெட்ட பழக்கம் சிகரெட் பிடிப்பது ஒன்றுதான். அதனாலேயே அவரது வீட்டுக்கு போவதை நிறுத்திவிட்டேன். அதனால் அவர் ரொம்ப வருத்தப்பட்டார். அந்த பழக்கம்தான் அவரது உயிருக்கே எமனாக இருந்தது. இதை எதற்காக சொல்கிறேன் என்றால், இங்கு யாராவது சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தால், தயவு செய்து, அதனை நிறுத்திவிடுங்கள்.
         பாஜ கட்சிக்காக இரவும், பகலும் உறங்காமல் உழைத்தவர் சரவணபெருமாள். அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல. அவர் இந்த நாட்டின் சொத்து. பாஜகவின் சொத்து. இனிமேல் அவரது பிறந்த நாட்களில், மாவட்டம் முழுவதும் மண்டல அளவிலும், கிளைகளிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும்.

 இவ்வாறு அவர் பேசினார். பின்னர் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒவ்வொருவராக எஸ்.ஆர். சரவணபெருமாள் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் சதாசிவம், மாவட்ட தொண்டரணி செயலாளர் முத்துச்செல்வம், மாநகர செயலாளர் உதயசூரியன் உள்பட மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo