Onetamil News Logo

தூத்துக்குடியில் கொலை முயற்சியில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது 

Onetamil News
 

தூத்துக்குடியில் கொலை முயற்சியில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது 


தூத்துக்குடி 2020 நவம்பர் 29 ;தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை முயற்சியில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
♻️ கடந்த 29.10.2020 அன்று முத்தையாபுரம் அம்மன்கோவில் தெருவைச் சேர்ந்த தங்கபாண்டி மகன் நாராயணசெல்வம் (30) என்பவரை முத்தையாபுரம் அய்யங்கோவில் தெருவைச் சேரந்த குஞ்சரவேல் மகன் உமையார் தங்கம் (20) மற்றும் அவரது நண்பர்கள் சிலர் சேர்ந்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து உமையார் தங்கத்தை கைது செய்தனர். இவ்வழக்கின் முக்கிய எதிரியான உமையார் தங்கம் என்பவரை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு அறிக்கை தாக்கல் செய்தார். 
♻️ மேற்படி காவல் ஆய்வாளர் அறிக்கையின் அடிப்படையில் எதிரி உமையார் தங்கத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார். 
♻️ அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ்  மேற்படி எதிரி முத்தையாபுரம் அய்யங்கோவில் தெருவைச் சேரந்த குஞ்சரவேல் மகன் உமையார் தங்கத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
♻️ அவரது உத்தரவின் பேரில் முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ், எதிரி உமையார் தங்கத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo