Onetamil News Logo

தூத்துக்குடி மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் தேர்தலில் போட்டியின்றி வெற்றி பெற்ற சிவசுப்பிரமணியன்  அஇஅதிமுக மாவட்ட கழக செயலாளர் சி.த. செல்லப்பாண்டியன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார்  

Onetamil News
 

தூத்துக்குடி மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் தேர்தலில் போட்டியின்றி வெற்றி பெற்ற சிவசுப்பிரமணியன்  அஇஅதிமுக மாவட்ட கழக செயலாளர் சி.த. செல்லப்பாண்டியன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார்  


தூத்துக்குடி,   2019 பிப்ரவரி 10 ;தூத்துக்குடி மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் தேர்தலில் போட்டியின்றிவெற்றி பெற்றவர்கள்..தூத்துக்குடி அஇஅதிமுக மாவட்ட கழக செயலாளர் சி.த. செல்லப்பாண்டியன் அவர்களை..மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார்கள்..                                                              
                                                                                                                                                            தூத்துக்குடி மேலூர் கூட்டுறவு வங்கி தேர்தல் கடந்த டிசம்பர் மாதம் நடந்தது. இதில், இயக்குநர் பதவிக்கு அதிமுக மாவட்ட செயலளார் சி.த செல்லப்பாண்டியன் ஆதரவாளர்கள் 11 பேர் போட்டியிட்டனர். இது போல் எஸ்,பி சண்முகநாதன் ஆதரவாளர்கள் ஏசாதுரை உட்பட 11பேர் போட்டியிட்டனர். மேலும், சி.த செல்லப்பாண்டியன் அணியைச் சேர்ந்த சங்கரேஸ்வரி, சிவசுப்பிரமணியன், சந்தனராஜ், திருமணி, வேல்முருகன், முத்துலட்சுமி, சங்கரி, பாலசுப்பிரமணியன், அன்புலிங்களம் ஆகியோர் வெற்றி பெற்று இயக்குநர்களாக தேர்வு செய்யப்பட்டனர். 
சண்முகநாதன் அணியில் ஏசாதுரை, எஸ்டி கருணாநிதி ஆகிய இருவர் மட்டுமே வெற்றி பெற்று இயக்குநர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இதையொட்டி ஏசாதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தார். இதனை விசாரணை செய்த நீதிபதி தேர்தல் செல்லும் என்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து தலைவர், துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கூட்டுறவு வங்கியில் நடந்தது. தேர்தல் அதிகாரியாக கூட்டுறவுத் துறைத் தனி அதிகாரி தனலெட்சுமி முன்னிலையில் நடந்தது. 
தலைவர் பதவிக்கு சங்கரேஸ்வரி, துணைத் தலைவர் பதவிக்கு சிவசுப்பிரமணியன் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அவர்களை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதையொட்டி அதிமுக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து கொண்டாடினர் இந்நிலையில் தூத்துக்குடி அதிமுக  மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த  .செல்லப்பாண்டியன்  அவர்களிடம் தூத்துக்குடி மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கு தேர்வு ஆகியவர்கள்  சங்கரேஸ்வரி, சிவசுப்பிரமணியன் ஆகியோர் அதிமுக மாவட்ட கழகத்தில் வைத்து நேரில் சந்தித்து  வாழ்த்து பெற்றார்கள்
உடன் இயக்குனர்கள் சந்தனராஜ், அன்புலிங்கம் திருமணி, வேல்முருகன் பாலசுப்பிரமணியன், பகுதி செயலாளர் முருகன் மற்றும் மணிகண்டன் உட்பட பலர் உள்ளனர்,
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo