Onetamil News Logo

தூத்துக்குடி ஒன்றியத்தில் பெண்கள் வாக்குசாவடி மையம் மற்றும் மாதிரி வாக்குசாவடி மையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள  வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் / மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி,  பார்வை

Onetamil News
 

தூத்துக்குடி ஒன்றியத்தில் பெண்கள் வாக்குசாவடி மையம் மற்றும் மாதிரி வாக்குசாவடி மையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள  வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் / மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி,  பார்வை


தூத்துக்குடி2019 ஏப்ரல் 17 ;தூத்துக்குடி பாராளுமன்ற பொதுத்தேர்தல் தூத்துக்குடி ஒன்றியத்தில் பெண்கள் வாக்குசாவடி மையம் மற்றும் மாதிரி வாக்குசாவடி மையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள  வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் / மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி,  பார்வையிட்டார்.
தூத்துக்குடி பாராளுமன்ற பொதுத்தேர்தல் அனைத்து பெண்கள் வாக்குசாவடி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மெஞ்ஞானபுரம் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் / மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி,  இன்று (17.04.2019) பார்வையிட்டார். மேலும் பேரூரணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையத்தினையும் நேரில் ஆய்வு செய்தார்.
                                                                                                                                        தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறவுள்ள தூத்துக்குடி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற இடைத்தேர்தலில் அனைத்து பெண்கள் வாக்குசாவடி மையம், மாதிரி வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளி மற்றும் மூத்த குடிமக்களுக்கு தேவையான  சாய்வுதள வசதிகள், சக்கர நாற்காலி வசதிகள், குடிநீர் வசதி, சிறப்பு கழிப்பறை வசதி, மாற்றுத்திறனாளிகள் வாகனம் நிறுத்துமிடம், குழந்தைகள் பாதுகாப்பு அறை, குடிநீர் வசதி, பொதுமக்கள் காத்திருத்ததல் இடம், ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்தனியாக கழிப்பிட வசதி உள்ளிட்ட வசதிகள் வாக்கு சாவடி மையங்களில் செய்யப்பட்டுள்ளதா என்பதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  மேலும் வாக்குசாவடி மையங்களில் ஆண் மற்றும் பெண்களுக்கு தனி வரிசை, வாக்குச்சாவடி மையத்திற்கு உள் மற்றும் வெளியெ செல்லும் வழி ஆகியவற்றை பார்வையிட்டு அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். மேலும், வாக்குச்சாவடி மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிடும்வகையில் எல்.இ.டி டிவி  வைக்கப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வு செய்தார். 
 
நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் பயிற்சி மரு.அனு, , உதவி இயக்குனர் ஊராட்சிகள் உமாசங்கர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo