Onetamil News Logo

தூத்துக்குடியில் சமூக சேவகர் எஸ்.ஜெகஜீவன் -க்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி 

Onetamil News
 

தூத்துக்குடியில் சமூக சேவகர் எஸ்.ஜெகஜீவன் -க்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி 


தூத்துக்குடி 2019 ஆகஸ்ட் 16 ;தூத்துக்குடியில் சமூக சேவகருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி பாராட்டினார். 
இந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணி செய்த பல்வேறு துறை சார்ந்த நபர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பாராட்டு சான்றிதழ் வழங்கினார். அவர்களுக்கு சுதந்திர தின விழாவில் விருது வழங்கியும் பாராட்டினார். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக சேவகர் எஸ். ஜெகஜீவன்-க்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இவர் 1996ம் ஆண்டு முதல் இன்று வரை சாதி ஒழிப்பு, வரதட்சனை, குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு, மாற்றுத்திறனாளிகள் நல வாழ்வு, தேர்தல் விழிப்புணர்வு, இப்படி பல விழிப்புணர்வுகளை செய்ததால் இவரை பாராட்டி சிறப்பாக பணியாற்றிய சமூக சேவகர் என்று பாராட்டுச் சான்றிதழை கலெக்டர் வழங்கினார். அவருடன் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது ) தியாகராஜன் உடன் இருந்தார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo