Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனவை கட்டுப்படுத்த டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்படுமா?

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனவை கட்டுப்படுத்த டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்படுமா?


தூத்துக்குடி 2020 ஜூலை 11 ;கொரோனா வைரஸ் எதிரொலியாக தூத்துக்குடி மாவட்டத்தில் 18 தியேட்டர்கள், வர்த்தக நிறுவனங்கள், பூங்காங்கள் மார்ச் 18 ம் தேதி முதல் மூடப்பட்டுள்ளன. 
கொரோனா வைரஸ் சீனாவில் வூகான் மாகாணத்தில் தொடங்கி தற்போது உலகம் முழுவதும் உயிர்க்கொல்லி நோயாக பரவி வருகிறது. இந்த நோயை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்கள், அனைத்து சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், கேளிக்கை அரங்குகள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி மையங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் ஆகியவற்றை ஊரடங்கு முடியும் வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, விளாத்திகுளம், திருச்செந்தூர், கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம் ஆகிய ஊர்களில் மொத்தம் உள்ள 18 தியேட்டர்கள் அனைத்தும் மார்ச் 18 ம் தேதி முதல் மூடப்பட்டன. இதனிடையே மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மால்கள், மல்ட்டி சூப்பர்மார்க்கெட்டுகள், பூங்காக்கள் உள்ளிட்டவை மூடப்பட்டன. 
பீச்ரோடுகளில் காலையில் வாக்கிங் செல்பவர்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. தெற்கு பீச்ரோட்டில் உள்ள படகு குழாம் உள்ளிட்ட சுற்றுலா மையங்கள் மூடப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டன. கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கின்டர் கார்ட்ன் முதல் மேல் நிலை வகுப்புகள் வரையிலான பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. 
பொது இடங்களில் கூடுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். தூத்துக்குடி மாநகராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் மாநகர் முழுவதும் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் கூடும் 10 இடங்களில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனவை கட்டுப்படுத்த டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்படுமா?
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo