Onetamil News Logo

17 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார்  வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டு   

Onetamil News
 

 17 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார்  வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டு   


         

தூத்துக்குடி 2020 அக்டோபர் 14 ;தூத்துக்குடி  மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல்  ஆய்வாளர்கள்  உட்பட 17 காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

 

கடந்த 05.10.2020 அன்று தெர்மல் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர்ந்து இரு சக்கர வாகனங்களை திருடி வந்த இரண்டு எதிரிகளை கைது செய்து திருடப்பட்ட இருசக்கர  வாகனங்களை கைப்பற்றிய  தெர்மல்நகர் காவல் நிலைய ஆய்வாளர் கோகிலா தனிப்பிரிவு தலைமைக் காவலர் சிக்டஸ் ஜெனிவர் பெண் காவலர் மேரி பொன் ராணி ஆகியோரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,

 

கடந்த 11.10.2020 அன்று ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆற்று மணல் திருடி கடத்திச் சென்ற எதிரிகளை கைது செய்து, மணல் திருட பயன்படுத்திய மினி லாரியை பறிமுதல் செய்த ஆறுமுகநேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன், முதல் நிலை காவலர்கள் வேல்குமார்,கண்ணன், காவலர் சந்திரசேகர் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,

   

நாசரேத் காவல் நிலைய எல்லைக்குட்டப்பட்ட பகுதியில் நகை மற்றும் பணம் பறிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரியை அடையாளம் கண்டு கைது செய்தும் திருடப்பட்ட ரூபாய் 45,000/- மதிப்புள்ள 3 சவரன் தங்க நகைகள் மற்றும்  பணம் ரூபாய் 3000/- மும் கைப்பற்றிய நாசரேத் காவல் நிலைய ஆய்வாளர் திரு. விஜயலட்சுமி, உதவி ஆய்வாளர் திரு. அனந்த முத்துராமன் தலைமைக் காவலர் திரு. பிரேம்குமார் மற்றும் காவலர் ஆறுமுகசெல்வம்  மெச்சத் தகுந்த பணிக்காகவும்,

 

கடந்த 11.10.2020 அன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குப்பட்ட பகுதியில் ஒரு ஆதரவற்றோர் இல்லத்திலிருந்து காணாமல் போன பெண்ணை மீட்டு அந்த இல்லத்தில் ஒப்படைத்தும், தட்டப்பாறை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலிருந்து தப்பிச் சென்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குப்பட்ட பகுதியில் சுற்றித் திரிந்த இரு சிறுவர்களை பிடித்து சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்த சிப்காட் காவல் நிலைய காவலர்கள் சுமித்ரன் மற்றும் நாசர் அலி ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காவும்,

 

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொள்ளை வழக்கில் திறம்பட செயல்பட்டு சம்பந்தபட்ட எதிரியை கைது செய்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாதவராஜா, கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய தனிப்பிரிவு தலைமைக் காவலர் ரமேஷ், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய காவலர்கள் கருப்பசாமி மற்றும் செல்வக்குமார் ஆகியோரின் மெச்ச தகுந்த பணிக்காவும்,

 

 காவல் ஆய்வாளர்கள்  உட்பட 17 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார்  வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் செல்வன் அவர்கள் உடனிருந்தார்.

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo