கொலையுண்ட சத்தியமூர்த்தியின் சகோதரர் ராஜேஷ் என்பவருக்கு தனியார் கம்பெனியில் பம்ப் ஆப்ரேட்டர் பணி வழங்கி, சிறப்பாக பணியாற்றுமாறு வாழ்த்திய எஸ்.பி ஜெயக்குமார்
தூத்துக்குடி 2021 பிப்ரவரி 26 ; தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தலைவன்வடலியில் கொலையுண்ட சத்தியமூர்த்தியின் சகோதரருக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுத்த மாவட்ட எஸ்.பி எஸ். ஜெயக்குமார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தலைவன்வடலி சேதுராஜா தெருவைச் சேரந்த கல்லூரி மாணவன் பரமசிவன் மகன் சத்தியமூர்த்தி (22) என்பவர் கடந்த 29.05.2020 அன்று கொலை செய்யப்பட்டார். அவரது குடும்பத்தினர் மனவேதனையிலும், வறுமையிலும் சிரமப்பட்டு வந்த சத்தியமூர்த்தி குடும்பத்தினர், அவரது சகோதரருக்கு வேலை வாய்ப்பு பெற்றுத் தருமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்களிடம் முறையிட்டனர்.
முறையிட்டதன்பேரில் மனிதாபிமான அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் ஆறுமுகநேரி காவல் நிலைய காவல் ஆய்வாளர் செல்வி மூலமாக அருகிலுள்ள தனியார் நிறுவனத்தை அணுகி வேலை வாய்ப்பு வழங்க கேட்டுக்கொண்டதனடிப்படையில், மேற்படி தனியார் நிறுவனம் இறந்த சத்தியமூர்த்தியின் சகோதரர் ராஜேஷ்(28) என்பவருக்கு பம்ப் ஆப்ரேட்டர் பணி வழங்கியது. அந்தப் பணியாணையை இன்று (26.02.2021) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் கொலையுண்ட சத்தியமூர்த்தியின் சகோதரர் ராஜேஷ் என்பவருக்கு வழங்கி, சிறப்பாக பணியாற்றுமாறு வாழ்த்தினார்.
வேலை வாய்ப்பு கொடுத்த தனியார் நிறுவனத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டி நன்றி தெரிவித்தார்.
அப்போது வேலை வாய்ப்பளித்த தனியார் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் செல்வி மற்றும் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.