Onetamil News Logo

ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் பெண்களுக்கான தொழில்முனைவு மேம்பாடு பயிற்சி முகாம்

Onetamil News
 

ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் பெண்களுக்கான தொழில்முனைவு மேம்பாடு பயிற்சி முகாம்


தூத்துக்குடி,2019 மே.20 ; பெண்களுக்கு தொழில் திறன்பயிற்சி மற்றும் சுய நம்பிக்கையை ஏற்படுத்துதல், சமுதாய ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சுயசார்புள்ளவர்களாக அவர்களை உருவாக்குவதற்காக ஸ்டெர்லைட் நிறுவனம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தூத்துக்குடியைச் சுற்றியுள்ள தெற்கு வீரபாண்டியபுரம், மீளவிட்டான், பண்டாரம்பட்டி, சில்வர்புரம், சங்கரப்பேரி, குமார ரெட்டியார்புரம், சாமிநத்தம், கயலூரணி, நைனார்புரம், வடக்குசிலுக்கான்பட்டி, வேலாயுதபுரம், சில்லநத்தம், புதியம்புத்தூர், அரசரடி, தலையாய்புரம் உள்ளிட்ட  15 கிராமங்களைச் சேர்ந்த சுயஉதவி குழுக்களிலிருந்து 18-ரூ45 வயதிற்குட்பட்ட 1000 பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்னர். சகி திட்டத்தின் ஒரு அங்கமாக அவர்களை  தேர்வு செய்து அவர்களுக்கு பைகள் தைத்தல், ஆர்கானிக் சானிட்டரி நாப்கின் தயாரிப்பு, கால்நடை வளர்ப்பு மற்றும் தேனீ வளர்ப்பு, காளான் வளர்ப்பு, நர்சரி உருவாக்கம், தையல் கலை, சணல் பை தயாரிப்பு, மண்புழு உரம் தயாரிப்பு மற்றும் இயற்கை பூச்சிக்கொல்லிகள் தயாரித்தல், ஆர்கானிக் முறையில் தேன் தயாரிப்பு, அழகுகலை நிபுணர் போன்ற பல்வேறு தொழில் பிரிவுகளில் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. குறைந்த பட்சம்  5 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை ஸ்டெர்லைட் நிறுவனம் இப்பயிற்சியினை வழங்குகிறது.
இதற்கான துவக்க நிகழ்ச்சியில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவன இணை துணை தலைவர் சுமதி தலைமை வகித்தார்.  பயிற்சி அலுவலர்கள் மற்றும் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவன அலுவலர்கள்  சுகந்தி செல்லதுரைஇ ஜெயஸ்ரீ மற்றும் பெண்கள்  பலர் கலந்து கொண்டனர். இப்பயிற்சி முகாம் இருகட்டங்களாக அமல்படுத்தப்படுகிறது. இப்பயிற்சி  குறித்து ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் பங்கஜ் குமார் தெரிவிக்கையில்: இத்திட்டத்தின் மூலம், நிதிசார்ந்த செயல்பாடுகளில் சுதந்திரமானவர்களாக செயல்படுவதற்கான திறன்களை கற்றுக்கொடுத்து பெண்களை செயல்திறன் அதிகாரம் கொண்டவர்களாக மாற்றுவதே எங்களது குறிக்கோள் என்றார். தூத்துக்குடியின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுமார் 1000 பெண்கள்  கலந்து கொள்ளும் இந்த பயிற்சி முகாம் நேற்று முதல் துவங்கி நடந்து வருகிறது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo