Onetamil News Logo

சாலை விபத்துக்குள்ளாகி இறந்த காவலர்கள் குடும்பத்திற்கு தலா ரூபாய் 2,00,000/- மதிப்பிற்கான காசோலையை எஸ்.பி.முரளி ரம்பா வழங்கினார். 

Onetamil News
 

சாலை விபத்துக்குள்ளாகி இறந்த காவலர்கள் குடும்பத்திற்கு தலா ரூபாய் 2,00,000/- மதிப்பிற்கான காசோலையை எஸ்.பி.முரளி ரம்பா வழங்கினார். 


தூத்துக்குடி,2019 ஏப்.23: தமிழ்நாடு காவலர் காப்பீட்டுத் திட்டத்தின் (Tamil Nadu Police Insurance Scheme)  மூலம் பணியிலிருக்கும் போது சாலை விபத்துக்குள்ளாகி இறந்த காவலர்கள் குடும்பத்திற்கு இன்று(22.04.2019)  மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா,  தலா ரூபாய் 2,00,000/- மதிப்பிற்கான காசோலை வழங்கினார். 
தூத்துக்குடி மாவட்டம் காடல்குடி காவல்நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பால்ராஜ் என்பவர் 03.04.2017 அன்று சாலை விபத்தில் மரணமடைந்தார். மற்றும் தூத்துக்குடி ஆயுதப்படையில் பணியாற்றி வந்த காவலர் சிவமுருகன் என்பவர் 20.12.2017 அன்று சாலை விபத்தில் மரணமடைந்தார். இவர்களது குடும்பத்திற்கு தமிழ்நாடு காவலர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், சிறப்பு உதவி ஆய்வாளர் பால்ராஜ் என்பவரது மனைவி தமிழ்செல்வி, மற்றும் காவலர்  சிவமுருகன் என்பவரது மனைவி உமா மகேஷ்வரி ஆகிய இருவருக்கும் தலா ரூபாய் 2,00,000/- பணத்திற்கான காசோலையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, வழங்கினார். இந்நிகழ்வின்போது தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலக ஓய்வூதிய பிரிவு கண்காணிப்பாளர் அந்தோணியம்மாள் மற்றும் இளநிலை உதவியாளர் சேர்மத்துரை ஆகியோர் உடனிருந்தனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo