Onetamil News Logo

உப்பள தொழிலாளர்களுக்கு கண்ணாடி இல்லை,செருப்பு இல்லை, குடி தண்ணீர் இல்லை கழிப்பிடம் செல்ல வழி இல்லை என்று கனிமொழி எம்.பி-யிடம்  கால்டுவெல் காலனி விழாவில் உப்பளத் தொழிலாளர்கள் கோரிக்கை 

Onetamil News
 

உப்பள தொழிலாளர்களுக்கு கண்ணாடி இல்லை,செருப்பு இல்லை, குடி தண்ணீர் இல்லை கழிப்பிடம் செல்ல வழி இல்லை என்று கனிமொழி எம்.பி-யிடம்  கால்டுவெல் காலனி விழாவில் உப்பளத் தொழிலாளர்கள் கோரிக்கை 


தூத்துக்குடி,2019 ஆகஸ்ட் 11 ; உப்பள தொழிலாளர்களின் கோரிக்கைகளை நாடாளுமன்றத்திற்கு கொண்டு செல்வேன் என்று கனிமொழி எம்.பி. கால்டுவெல் காலனியில் பேசினார்.
 ஜனநாயக உழைக்கும் பெண்கள் கூட்டமைப்பு சார்பில்  தூத்துக்குடி கால்டுவெல் காலனி தனியார் திருமண மண்டபத்தில் பெண் தொழிலாளர்களின் உரிமை மாநாடு நடந்தது. இந்த மாநாட்டிற்கு பெண்கள் கூட்டமைப்பு அமைப்பாளர் ராமலட்சுமி தலைமை தாங்கினார். கீதாஜீவன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.கிருஷ்ணமூர்த்தி வாழ்த்தி பேசினார்.சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டார்.
மாநாட்டில் உப்பள தொழிலாளர்களுக்கு மழை கால நிவாரணம் வழங்க வேண்டும். மீன் பதப்படுத்தும் நிறுவனங்களில் 8 மணி நேர வேலை, ஊதியத்துடன் வார விடுமுறை, பெண் தொழிலாளர்களுக்கு அனைத்து விதமான பாதுகாப்பும் உறுதி படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில் கனிமொழி எம்.பி. பேசும் போது கூறியதாவது;-
உப்பள தொழிலார்களுக்கு கண்ணாடி இல்லை,செருப்பு இல்லை,குடிதண்ணீர் இல்லை கழிப்பிடம் செல்ல வழி இல்லை என்று பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனர்.நானே உப்பளத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்த இருக்கிறேன். இன்று அணைத்து அமைப்பு சாரா  தொழில் செய்யும் ஆண்களுக்கு இணையாக பணியாற்றும் பெண்களுக்கு ஆண்களை விட குறைந்த சம்பளம் மற்றும் அங்கீகாரம் வழங்கப்படுகிறது. தற்போது நிலைமை மாறி வருகிறது. பெண்கள் எந்த தடையாக இருந்தாலும் அதனை உடைத்து எறிய துணிந்து விட்டனர். உப்பள தொழிலாளர் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. அவர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை. முதல் உதவி சிகிச்சை வசதிகள் இல்லை.வரும் தேர்தலில் தி.மு.க. நிச்சயம் ஆட்சிக்கு வரும். தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடன் உப்பள தொழிலாளர்களுக்கு மழை நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்படும். பல அமைப்பு சாரா தொழிற்சங்கங்கள் இந்த ஆட்சியில் இயங்காமல் உள்ளன. தி.மு.க. ஆட்சியில் அவைகள் மீண்டும் இயக்கும்.தி.மு.க. ஆட்சிக்கு வரும் முன்பே இந்த பகுதி மக்களின் கோரிக்கைகளை நாடாளுமன்றத்திற்கு கொண்டு செல்வேன். அதோடு சம்பந்தப்பட்ட அமைச்சர்களையும் சந்தித்து இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார். மாநாட்டில் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஜெகன்,மாநகர செயலாளர் ஆனந்த   சேகரன்,கால்டுவெல் காலனி முன்னாள் கவுன்சிலர் நவநீதன்,3 செண்ட் மூக்கையா  உள்பட பல திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo