Onetamil News Logo

மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், 61 நபர்களுக்கு ரூ.17.98 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, வழங்கினார். 

Onetamil News
 

மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், 61 நபர்களுக்கு ரூ.17.98 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, வழங்கினார். 


தூத்துக்குடி 2019 நவம்பர் 11 :தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், 61 நபர்களுக்கு ரூ.17.98 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, வழங்கினார். 
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும்  கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  தலைமையில் இன்று (11.11.2019) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் , முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, பட்டா பெயர் மாற்றம், கல்விக்கடன், தொழிற்கடன் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வேண்டிய கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை, பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்டார். மேலும், மனுக்கள்; மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள். பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், மாற்றுத்திறனாளிகளின் இருப்பிடங்களுக்கு சென்று கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். 
அதனைத்தொடர்ந்து, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் 2 நரிகுறவர்களுக்கு பசுமை வீடுகள் கட்டுவதற்கு உத்தரவினையும், மகளிர் திட்டம் மூலம் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின்கீழ், 20 உழைக்கும் மகளிர் மாற்றுதிறனாளிக்கு ரூ.6,25,000க்கான மானியம் மற்றும் தனியார் நிறுவன சமுதாய பொறுப்பு நிதியிலிருந்து (ஊளுசு) ரூ.4,95,660 என மொத்தம் ரூ.11,20,660 மதிப்பிலான இலவச மூன்று சக்கர வாகனங்களும், வருவாய் துறை மூலம் 12 நபர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாக்கான உத்தரவையும்,  கலால் துறை மூலம் கள்ளச்சாராய தொழிலில் ஈடபட்டு மனந்திருந்திய 22 நபர்களுக்கு மறுவாழ்வு நிதி  உதவியாக ரூ.6,60,000க்கான காசோலைனையும், பிற்படுத்தப்பட்டோர்/மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல துறை மூலம் 5 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்கள் என மொத்தம் 61 நபர்களுக்கு ரூ.17,98,525 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர், வழங்கினார். 
இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரான் ஜித் சிங் காலோன், , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, மகளிர் திட்ட அலுவலர் ரேவதி, உதவி ஆணையர் (கலால்) சுகுமார், பிற்படுத்தப்பட்டோர்/மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கந்தசாமி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன், தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வகுமார், கோவில்பட்டி வட்ட வளர்ச்சி அலுவலர் கிரி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo