Onetamil News Logo

வாகைக்குளத்தில் மாற்றுத்திறனாளிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆவின் பாலகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, திறந்து வைத்தார்.

Onetamil News
 

வாகைக்குளத்தில் மாற்றுத்திறனாளிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆவின் பாலகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, திறந்து வைத்தார்.


தூத்துக்குடி 2020 செப் 15 ;தூத்துக்குடி மாவட்டம் வாகைக்குளத்தில் மாற்றுத்திறனாளிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆவின் பாலகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, திறந்து வைத்தார்
தூத்துக்குடி மாவட்டம் வாகைக்குளத்தில் மாற்றுத்திறனாளி திருமதி.வள்ளியம்மாள் என்பவருக்கு ஆவின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆவின் பாலகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, இன்று திறந்து வைத்தார். 
பின்னர்  மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தெரிவித்ததாவது:
தூத்துக்குடி மாவட்டம் வாகைக்குளம் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான திருமதி.வள்ளியம்மாள் தனது இரு மகன்களுடன் ஆதரவின்றி வாழ்ந்து வந்தார். வள்ளியம்மாள் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடும் வகையில் ஆவின் மூலம் பாலகம் வைக்கவும், நெடுஞ்சாலைத்துறை மூலம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டு வாகைக்குளம் பேருந்து நிறுத்தம் அருகில் ஆவின் பாலகம் திறக்கப்பட்டுள்ளது.  மேலும், இந்த ஆவின் பாலகம் மூலம் அருகில் உள்ள வீடுகளுக்கு தினசரி 300 லிட்டர் வரை பால் வியாபாரம் செய்யப்பட்டு வருகிறது. இவருக்கு வங்கியின் மூலம் ரூ.3 லட்சம் வரை கடன் உதவி பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.நிகழ்ச்சியில் தூத்துக்குடி ஆவின் பொது மேலாளர் ராமசாமி, விற்பனை மேலாளர் அனுசா ஆகியோர் கலந்துகொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo