Onetamil News Logo

பனை மரத்தின் நன்மைகள் ;தமிழ்நாட்டின் மாநில மரம் - பனைமரம் 

Onetamil News
 

பனை மரத்தின் நன்மைகள் ;தமிழ்நாட்டின் மாநில மரம் - பனைமரம் 


தூத்துக்குடி 2019 மே 21;  பனைமரம் ஏறத்தாழ 108 நாடுகளில் உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் கள் எடுக்க தடைச்சட்டம் உள்ளது. இதனால் பனைமரங்கள் அழிவின் விளிம்பில் உள்ளது. கள் இறக்குவதற்கான அனுமதி இருந்த வரை, அதனால் வருமானம் கிடைத்தவரை பனை மரங்களை காப்பாற்ற வேண்டும் என்ற கவலை விவசாயிக்கு இருந்தது. அதன்பிறகு, பனை மரங்களை கைவிட்டு விட்டனர் விவசாயிகள். வறட்சி காரணமாக பனை மரங்களை காப்பாற்ற முடியாமல் செங்கல் சூளைக்கும், சுண்ணாம்பு காளவாசலுக்கும் எரிபொருளாக வெறும் ரூ.50க்கு விற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது
                                     
ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் 30 கோடி பனை மரங்கள் இருந்தன. தற்போது வெறும் 5 கோடிதான் உள்ளன. இவையும் தற்போது அழிக்கப்பட்டு வருகின்றன.
பனையில் ஆண், பெண் என 2 வகை உள்ளன என்று சொல்லப்படுகிறது. பெண் பனையை பருவப் பனை என்றும், ஆண் பனையை அழகுப் பனை எனக் குறிப்பிடுவது வழக்கம். பனை 10 ஆண்டுகளுக்குப் பின்னர் 15 அடி உயரம் வரை வளர்க்கிறது. இந்த 10 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் பூ பூக்கும். அப்போது தான் ஆண் பனை, பெண் பனை எது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.                                                                                                                                         
                                                                                                                                                             தென்னக மக்கள் முன்னேற்ற கழகம், நிறுவனத்தலைவர், மக்கள்வேந்தர் அ.சுதாகர பாண்டியன்.வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது...
1.இதன் மட்டை அழகிய eco ரெஸ்டாரென்ட் கூரை வேய பயன்படும் ஒரு மரத்தின் மூலம் வருடத்திற்கு 15 மட்டைகள் எடுக்கலாம் .
2.இதன் பூ (பாலை) பதநீர் கிடைக்கும் இது உடம்ப்பிற்கு மிகுந்த ஆற்றலையும் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் இழந்த சக்தியை மீட்டுத்தரும்.
3.இதன் காய் நொங்கு இதுவும் மேல் கூறிய குளிச்சி மற்றும் உண்ட்ம்பிற்கு தேவையான ஆற்றலை தரவல்லது.
4.இதன் தண்டு ஒரு உறுதியான தூண் அமைக்க பயன்படும்
5.இதன் கனி உண்ணவும் இதன் கனியை நிலத்தில் புதைத்து பனை கிழங்கு தயாரிக்க பயன்படும் இந்த கிழங்கை வேகவைத்து உண்டால் உண்டம்பிற்கு மிகுந்த ஆரோக்கியம் இதில் கிழங்கிர்க்கே உரிய வாயு தொல்லை அற்றது
6.இந்த மரத்தை நகரத்தில் வளர்க ஏதுவானது அதிக அளவு நிழல் தரவில்லை என்றாலும் அதிக அளவு பயனுள்ளது இதன் வேர் ஆணி வேர் தொகுப்பு எனவே பக்கவாட்டி வளர்ந்து கட்டங்களுக்கு சேதம் விளைவிக்காது இதற்கு நிலத்தடி நீர்மட்டம் எவ்வளவு ஆழத்தில் இருந்தாலும் அதிங்கம் உருஞ்சும் குணம் கிடையாது. பனை மரம் வளர்க அதிகமான இடம் பக்கவாட்டு/மேல்மட்டம் தேவை இல்லை குறைந்த அளவு இருந்தால் போதும்
 _சிந்திப்பீர்​  50 ஆண்டுகளில் பெரிய இழப்பு 25 கோடி பனை மரங்கள் அழிப்பு, இதற்கு காரணம் வெள்ளை சர்க்கரையை நம்மிடம் கொடுத்து நம்மை சர்க்கரை நோயாளிகளாக மாற்றவே இதன் மூலம் மில்லியன்களில் மருத்துவத்தில் பணம் சம்பாதிக்கபடுகின்றது..
 சிறு குறிப்பு : வருடத்துக்கு ஒரு பனை மரம் கொடுப்பது:
 180 லிட்டர் பதநீர்
 25 கிலோ கருப்பட்டி
 20 கிலோ பனை நார்
 10 கிலோ விறகு
 6 பாய்
 2 கூடை
 குறைந்த விலை வைத்தாலும் ஒரு பனை கொடுக்கும் வருட வருமானம் ₹17,820
 பனைமரம்  – பனை மரத்தின் நன்மைகள்:
1. பனைமரம் ஏரி குளங்களில் மண்ணரிப்பை தடுக்கும் அதன் வேர்கள் நிலத்தடி நீரை பாதுகாக்கும்.
2. பனை மரம் ‘கா ,ஓலைகள் கூரைகள் கட்டுவத்க்கும் அதன் மட்டை பாதுகாப்பு படல் அமைக்கவும் அதன் நாறு கட்டுகதற்க்கும் அதன் ஓலைகள் கழைபொருள் பாய் பெட்டி போன்றவற்றை செய்ய பயன்படும்._
3. பனை மரம் பதநீர் 100 சதவீத இயற்கை பானம் உடல் சூட்டை தணிக்கும் அதன் கருப்பட்டி கல்கண்டு ஆகியவை சிரந்த நாட்டு மருத்துவம் கருப்பட்டி சேர்த்த பொழுது எவர்க்கும் சக்கரை வியாதி இல்லை பனங்கல் மிதமான போதைதரும் உடலுக்கு எந்த தீங்கும் இல்லை._
4. பனை மரம் பழம் மிக அதிகமாக வைட்டமின் சி கொண்டது அதன் கொட்டை அதிக புரசத்து நிறைந்த தவம் கொன்டது அதன் கிழங்கு அதிகமான நார்சத்து கொண்டது._
5.பனை மரம் காய்ந்த வேரை புகையிலை யாக முன்னோர்கள் புகைத்தன்னர் காய்ந்த மரத்தை வலை அமைத்து வீடு அகைப்பை கரண்டி சாடிகள் கூசாக்கள் அமைத்தன._
 *இவ்வளவு நன்மைகள் செய்யும் பனை மரம் வியார சூத்திரர்களின் சூழ்ச்சியால், மதுபான அரசியல்வாதிகளின் சூழ்ச்சியால் திட்டமிட்டு 30 கோடி பனை மரங்கள் நம்மை கொண்டே அழிக்கப்பட்டது. தேசியமரம் பனைமரத்தை பாதுகாப்போம்.
நமது பண்பாட்டின் அடையாளமாக விளங்கும் பனை மரங்களை நேசிப்போம்!
பனை மரங்களை பாதுகாப்போம்!
பனை மரங்களினால் பயன்பெறுவோம்!
வளமுடன் வாழ்வோம்!. உறவுகளே..
 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo