Onetamil News Logo

தூத்துக்குடியில் திருவள்ளுவர் திருநாள் விழா

Onetamil News
 

தூத்துக்குடியில் திருவள்ளுவர் திருநாள் விழா


தூத்துக்குடி 2020 ஜனவரி 22 ;தூத்துக்குடியில் திருவள்ளுவர் திருநாள் விழா நடைபெற்றது.மக்கள் சக்தி இயக்கம், உலகத்திருக்குறள் பேரவை, தமிழ் அறம், அமைப்புகளின் சார்பில் திருவள்ளுவர் திருநாள் விழா தூத்துக்குடி டி.ஏ.திருமண மண்டபத்தில் மக்கள் சக்தி இயக்கத்தின் மாநிலத்தலைவர்,உலகத்திருக்குறள் பேரவையின் தலைவர், தமிழறத்தின் ஆசிரியர் மருத்துவர்.த.இராசலிங்கம் தலைமையில் அரிமா டி.ஏ.தெய்வநாயகம், மருத்துவர்.சு.மாரிமுத்து முன்னிலையில் நடைபெற்றது. 
உலகத்திருக்குறள் பேரவையின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் மோ.அன்பழகன் வரவேற்றுப் பேசினார். 

திருக்குறள் வே.அறிவுச்செல்வம் ஆசிரியர்கள் கலைவாணி ஆ.சுந்தரி மற்றும் மாணவர் முகுந்தன், மாணவி திருமதி ஆகியோர் திருக்குறள் முற்றோதல் செய்தனர். 
குறள் வழியில் இல்லறம் எனும் தலைப்பில் மக்கள் சக்தி இயக்கத்தின் பொதுச்செயலாளர், தஞ்சை சரபோசி மன்னர் கல்லூரி ஆங்கிலத்துறைப் பேராசிரியர் பாஸ்கர், ‘திருக்குறளில் மேலாண்மை’ எனும் தலைப்பில் தூத்துக்குடி ஏ.பி.சி.மகாலெட்சுமி கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் க.சுப்புலெட்சுமி, ‘உலகப்பொதுமறையின் உச்சித்திலகம் காமத்துப்பால்’ எனும் தலைப்பில் புலவர் பே.சங்கரலிங்கமும் உரையாற்றினார்கள். 
காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி முன்னாள் முதல்வர், தமிழாலயத்தின் சிறப்பு ஆசிரியர் மு.பி.பா (எ) மணிவேந்தன் சிறப்புரையாற்றினார். உலகப்பொது மறை திருக்குறளை நடுவணரசு இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டுமென ஒற்றை வரித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 
திருவரமங்கை விழாத் தொகுப்புரை வழங்கினார். மக்கள் சக்தி இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் வீ.கந்தசாமி நன்றியுரையாற்றினார். கூட்டத்தில் பெருங்குளம் செங்கோல் மடத்தின் ஆதினகர்த்தர், பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியின் முன்னாள் முதல்வர் கவிஞர் சவகர்லால்,பேராசிரியர் குருலெட்சுமி சீவஜோதி இராசலிங்கம், சைவநெறி காந்தி, இலக்குமணன், கவிஞர் இளமுருகு, மருத்துவர் பூங்கோதை, கண்ணன், முருகானந்தம், செயராமன், வையாபுரி ராசன், இளங்கோ, தாமோதரன், நாம்தமிழர் சௌந்தரபாண்டியன், தனு~;கோடி, வெண்ணிலா, ஆசிரியர் காசி, செய்யது முகம்மது செரிப், ஆசிரியர் முத்துசுந்தரம், அய்யம்பெருமாள், காமராசு, முருகையா, தபராசு, தாழை மணி, தமிழ்ச்செல்வன், முத்துக்குமார், ஆசிரியர் சுந்தர்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo