Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தல் 2019 முன்னேற்பாடுகள் ;ஆய்வு கூட்டம்

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தல் 2019 முன்னேற்பாடுகள் ;ஆய்வு கூட்டம்


   
தூத்துக்குடி 2019 பிப்ரவரி 11 ;தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தல் 2019 தேர்தல் முன்னேற்பாடுகள் - ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் மு.வீரப்பன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
    தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தல் 2019 முன்னேற்பாடுகள் செய்யும் பொருட்டு ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் மு.வீரப்பன்  தலைமையில் இன்று (11.02.2019) நடைபெற்றது.  
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் மு.வீரப்பன்  தெரிவித்ததாவது:-
    நாடாளுமன்ற தேர்தலின்போது வாக்குப்பதிவு இயந்திரத்துடன் வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு (ஏஏPயுவு) இயந்திரம் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பயன்படுத்தப்பட உள்ளது. எனவே, வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சிகளை முழுமையாக சந்தேகத்துக்கு இடமின்றி வழங்க வேண்டும். வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும். தேர்தல் மண்டல அலுவலர்களுக்கு தேவையான வாகன வசதிகளை முன்கூட்டியே ஏற்பாடு செய்ய வேண்டும்.  வாக்கு எண்ணிக்கை மையம் அமைப்பது தொடர்பாகவும், அங்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும் முன்னதாகவே நடவடிக்கை எடுக்க வேண்டும்.  
                                                                                                                             தூத்துக்குடி மாவட்டத்தின் வாக்குச்சாவடி மண்டல வரைபடம், வட்ட அளவிலான வரைபடம் தயார் செய்திட வேண்டும். தேர்தல் வரவு-செலவு கணக்குகளை எவ்வாறு தயார் செய்வது தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை அறிந்து அதன்படி செய்திட வேண்டும். தபால் ஓட்டுகள் அனுப்புவது தொடர்பாகவும், வாக்குச் சாவடிகளை தொடர்பு கொள்ளும் திட்டம் தொடர்பாகவும், பொதுமக்களிடமிருந்து கேட்கப்படும் தகவல்களுக்கு தகவல் வழங்க மாவட்ட தகவல் மையம் தொடர்பாகவும் சம்பந்தப்பட்ட ஒருங்கிணைப்பு அலுவலர்கள் தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், சட்டம் ஒழுங்கு அறிக்கை அனுப்புதல் தொடர்பாகவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என  மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தார்.
                                                                                                                                     கூட்டத்தில் உதவி ஆட்சியர் (பயிற்சி) மரு.அனு, , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் நேர்முக உதவியாளர்(பொது) தியாகராஜன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமாசங்கர், தேர்தல் வட்டாட்சியர் நாகராஜன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo