Onetamil News Logo

 தூத்துக்குடி தமிழ் இலக்கியப் பேரவையின் 227 வது கூட்டம் 

Onetamil News
 

 தூத்துக்குடி தமிழ் இலக்கியப் பேரவையின் 227 வது கூட்டம் 


தூத்துக்குடி 2019 அக்டோபர் 21 ; தூத்துக்குடி தமிழ் இலக்கியப் பேரவையின் 227 வது கூட்டம் காரப்பேட்டை நாடார் தெற்கு தொடக்கப் பள்ளியில் வைத்து நடைபெற்றது. கூட்டத்திற்கு செயல் தலைவர் அல்பர்ட் தலைமை தாங்கினார். கருவூல இணை இயக்குநர் கணேசன் முன்னிலை வகித்தார். முனைவர் சரவணகுமார் இன்றைய சூழலும் இன்னாசெய்யாமையும் என்கின்ற தலைப்பில் உரையாற்றினார். திருக்குறளார் அரு. அ.சீ. தனபாலன் காந்தியடிகளின் கொள்கைகளை மறந்த மையால் வந்த தீமைகள் என்கின்ற தலைப்பில் உரையாற்றினார். புலவர் சங்கரலிங்கனார் காந்தியடிகளின் நெறி என்கின்ற தலைப்பில் உரையாற்றினார்கள் . காந்தியடிகளின் குணநலன்கள் பற்றி ஞா. அல்பர்ட் பேசினார். செயலாளர் ஆதி அருமைநாயகம் நன்றியுரை கூறினார். இக்கூட்டத்தில் தகவல் தொடர்பாளர் ஷெரிப் பேராசிரியர் நீதி செல்வம் திருக்குறளார் அறிவுச்செல்வம் தமிழாசிரியர்கள் சுந்தர்சிங், பூபால் செல்லையா பசுமை படை அமைப்பாளர் ராஜ்குமார் மற்றும் தொழில் நுட்ப ஆசிரியர் எபனேசர் தபராசு இலக்கியப் பேரவை தனபால் ஆசிரியை ஜாய்ஸ், மற்றும் ஆல்வின் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo