Onetamil News Logo

கலைமாமணி பொ கைலாசமூர்த்தி மறைவுக்கு ;தூத்துக்குடி தமிழ் பண்பாடு மேம்பாட்டு மையம் சார்பில் இரங்கல் செய்தி

Onetamil News
 

கலைமாமணி பொ கைலாசமூர்த்தி மறைவுக்கு ;தூத்துக்குடி தமிழ் பண்பாடு மேம்பாட்டு மையம் சார்பில் இரங்கல் செய்தி


தூத்துக்குடி, 2020 ஜூலை 11 ; ஒயிலாட்டக்கலைக்கு உயிர் கொடுத்து 50 ஆண்டுகாலம் வளர்த்தவர்  தூத்துக்குடி கலைமாமணி பொ கைலாசமூர்த்தி அவர்கள் மறைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு தூத்துக்குடி தமிழ் பண்பாடு மேம்பாட்டு மையம் பொறுப்பாளர்களுக்கு ஆற்றவொணா வேதனையளிக்கிறது.                                                                                                   
         இதுகுறித்து தூத்துக்குடி தமிழ் பண்பாடு மேம்பாட்டு மையம் தலைவர் செ,ஜெகஜீவன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்ததாவது...... ஒயிலாட்டம் என்பது, ஒரே நிறத் துணியைத் தலையில் கட்டிக்கொண்டு, கையில் ஒரே நிறத்திலான துண்டு ஒன்றை வைத்து இசைக்கேற்ப வீசி ஆடும் அழகான குழு ஆட்டம். ஆண்கள் சார்ந்த கலை,இந்த ஆட்ட அடவுகள், ஆண்மைத் தன்மையை வெளிப்படுத்தும் தன்மை கொண்டவை ஆகும். பத்து முதல் 12 பேர் கொண்ட இந்த ஆட்டத்தில், எதிரெதிர் திசையிலோ, அல்லது நேர்த்திசையிலோ நின்று கொண்டு ஆடுவார்கள். இந்த ஆட்டம் தென் தமிழகத்தில் ஆடப்பட்டு வருகின்றது.
நமது கலை கலாசாரத்தை எத்தனை விதமாக சொன்னாலும், நடனத்தின் மூலமாக சொல்லும்போது தமிழுக்கான அழகு மேலும் அதிகரிக்கின்றது. 
இப்படி ஒயிலாட்டத்தை மெருகேற்றியது தூத்துக்குடியை உலகறியச்செய்த  தமிழகத்தின் தலைசிறந்த ஒயிலாட்டக் கலைஞர், ‘கலைமாமணி‘ அய்யா .பொ.கைலாசமூர்த்தி (75) நேற்று 10.07.2020 மாலை மாரடைப்பால் காலமானார். என்பதை கேட்டு சொல்லொணாத் துயரம் எய்தினேன். 
திண்டுக்கல் மாவட்டம், திருமலராயபுரம் என்ற ஊரில் பிறந்த பொ கைலாசமூர்த்தி, தமிழ்நாடு அரசின் உள்ளாட்சித் துறையின் கணக்காளர் பிரிவில் பணி நியமனம் பெற்று, தூத்துக்குடி நகருக்கு புலம் பெயர்ந்தவர். தூத்துக்குடி நகரில் அய்யலு தெரு, மட்டைக்கடையில் மனைவி திருமதி.நவநீதசுந்தரி அவர்களுடன் வசித்து வந்தார்.பொதுவுடைமை கொள்கையால் ஈர்க்கபட்ட பொ கைலாசமூர்த்தி தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தில் இணைந்து இறுதி மூச்சு வரை செயலாற்றியவர்.தமிழர் மரபில் வளர்ந்த ஒயிலாட்டக் கலையை பாதுகாத்து, வளர்த்து வந்தவர். இதில் 1000 -கணக்கான இளைஞர்களுக்கு கலைகளை  பயிற்றுவித்துள்ளார்.
இந்திய நாடு முழுவதும் ஒயிலாட்டக் கலையை எடுத்துச் சென்ற பொ.கைலாசமூர்த்தி அவர்கள் 2009 ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் இயக்கப் பணிகளில் நேரடியாக ஈடுபட்டு வந்தவர். 
இன்று 11.07.2020 ஆம் தேதி காலை கொரானா நோய் பெருந்தொற்று பரவல் காரணமாக வேலையிழந்த கிராமியக் கலைஞர்களுக்கு நிவராண உதவிகள் வழங்க ஏற்பாடு செய்துள்ளார். இதற்கான பணிகளை முடித்து வீடு திரும்பிய ஐயா,பொ கைலாசமூர்த்தி அவர்கள் திடீரென மயங்கி விழுந்து மாரடைப்பால் காலமானார் என்ற துயரச் செய்தி ஆற்றவொணா வேதனையளிக்கிறது.
ஒயிலாட்ட கலைஞர் பொ. கைலாசமூர்த்தி மறைவுக்கு,தூத்துக்குடி தமிழ் பண்பாடு மேம்பாட்டு மையம் வீரவணக்கம் செலுத்துகிறது.அன்னாரை பிரிந்து தவிக்கும் அவரது இணையர் திருமதி நவநீதசுந்தரிக்கும், குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo