Onetamil News Logo

பரமன்குறிச்சியில் நடைபெற்ற  முதலமைச்சர் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தில், 662 பயனாளிகளுக்கு ரூ.2.58 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் 

Onetamil News
 

பரமன்குறிச்சியில் நடைபெற்ற  முதலமைச்சர் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தில், 662 பயனாளிகளுக்கு ரூ.2.58 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் 


தூத்துக்குடி 2019 நவம்பர் 30 ;தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் பரமன்குறிச்சியில் நடைபெற்ற  முதலமைச்சர் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தில், 662 பயனாளிகளுக்கு ரூ.2.58 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூவழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம் பரமன்குறிச்சி ஏ.ஆர்.ஏ.எஸ். திருமண மண்டபத்தில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  தலைமையில் இன்று (30.11.2019) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்,  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ கலந்து கொண்டு, வருவாய்த்துறையின் மூலம் 250 பயனாளிகளுக்கு ரூ.2,38,91,410/- மதிப்பிலான இலவச வீட்டுமனைப்பட்டாவிற்கான உத்தரவு மற்றும் 312 பயனாளிகளுக்கு ரூ.5,07,000/- மதிப்பிலான முதியோர் ஒய்வூதியத்திற்கான ஆணைகளையும், கால்நடை பராமாப்புத்துறையின் மூலம் 63 பயனாளிகளுக்கு ரூ.5,89,510/- மதிப்பிலான விலையில்லா வெள்ளாடுகள், வேளாண்மைத்துறையின் மூலம் 9 விவசாயிகளுக்கு ரூ.1,32,765/- மதிப்பிலான விவசாய இடுபொருட்களையும், மகளிர் திட்டத்தின் மூலம் மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனங்கள 19 பயனாளிகளுக்கு ரூ.4,75,000/- மதிப்பிலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,49,000 மதிப்பிலான நவீன சக்கர நாற்காலிகளையும்;, மருத்துவத்துறை மூலம் அம்மா ஊட்டச்சத்து பெட்டகம் 4 பேர்களுக்கும், அம்மா குழந்தைகள் நல பெட்டகம் ஒரு பயனாளிக்கும் என மொத்தம் 662 பயனாளிகளுக்கு ரூ.2,57,54,185/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி.சண்முகநாதன்(திருவைகுண்டம்), போ.சின்னப்பன் (விளாத்திகுளம் ) ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
இவ்விழாவில்,  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ பேசியதாவது:- 
               தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தினை சேலம் மாவட்டத்தில் 09.11.2019 அன்று துவக்கி வைத்து தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள கிராமங்களுக்கு அலுவலர்கள் சென்று கோரிக்கை மனுக்களை பெற்று தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டார்கள். அதனடிப்படையில் நமது மாவட்டத்தில்,  ஒரு மாத காலம் முகாம் நடத்தப்பட்டு 12668 மனுக்கள் பெறப்பட்டது. இதில் 5015 மனுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மற்ற மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  ஏற்கனவே கோவில்பட்டி மற்றும் கயத்தார் வட்டத்தில் உள்ள 1043 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 29 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், விளாத்திகுளம் மற்றும் எட்டயபுரத்தில் 1122 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 75 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், தூத்துக்குடி மற்றும் ஓட்டப்பிடாரத்தில் 1285 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 29 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், திருவைகுண்டம் மற்றும் ஏரலில் 900 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 48 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. இன்று திருச்செந்தூர் மற்றும் சாத்தான்குளம் வட்டத்தில் 662 பயனாளிகளுக்கு ரூ.2.58 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இந்திய அளவில் தமிழகத்தில்தான் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்த இந்த திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள்மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு கணிணியில் பதிவு செய்யப்பட்டு முறையாக தீர்வு காணப்பட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்க திட்டத்தை 2019-ல் சிறப்பாக செயல்படுத்தி, தென் இந்திய அளவில், தூத்துக்குடி மாவட்டம் 2வது இடம் பிடித்தமைக்காக, டெல்லியில்  உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில், மத்திய அரசின் விருது நமது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஸ்வச் சர்வேகாஷன் கிராமீன் விருதினை (Swachh Survekshan Grameen 2019) பெற்று நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். 
அம்மா முதலமைச்சராக பொறுப்பேற்பதற்கு முன்பாக  மக்கள் அரசை தேடி செல்லும் நிலை இருந்தது. மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2011ம் ஆண்டு முதலமைச்சராக பொறுப்பேற்றபோது இந்த நிலையை மாற்றி மக்களை தேடி அரசு செல்கின்ற நிலையை ஏற்படுத்தினார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம்தோறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், மீனவர் குறைதீர்க்கும் கூட்டம், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் என இருந்தும்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின்கீழ் மக்களின் குறைகளை தீர்த்து வைப்பதற்காக சிறப்பு குறைதீர் கூட்டம் துவக்கி வைக்கப்பட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டத்தின் மூலம் பொதுமக்கள் அனைவரும் பயன்பெறுவதற்காக அனைத்து துறை அரசு அலுவலர்களும் நேரில் சென்று மனுக்களை பெற்று 50 சதவிதம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.  புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஏழை எளிய மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடிட பொங்கல் பரிசு திட்டத்தினை செயல்படுத்தினார்கள்.  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொங்கல் பரிசுடன் ரூ.1000 ரொக்கமாக கடந்த ஆண்டு வழங்கினார்கள். அதுபோல இந்த வருடமும் பொங்கல் பரிசுடன் ரூ.1000 வழங்க உத்தரவிட்டுள்ளார்கள். மேலும், 9 மருத்துவ கல்லூரிகளை துவக்கிட மத்திய அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. இதன்மூலம் எதிர்காலத்தில் 1500 மருத்துவ படிப்புக்கான இருக்கைகள் அதிகரிக்கும். அரசின் திட்டங்களை பெறும் நீங்கள் அவைகளை முறையாக பயன்படுத்தி வாழ்க்கை தரத்தினை உயர்த்திக்கொள்ள வேண்டும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்  பேசினார். 
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், திருச்செந்தூர் கோட்டாட்சியர் (பொறுப்பு) விஜயகுமார், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சங்கரநாராயணன், வட்டாட்சியர்கள் ஞானசேகர் (திருச்செந்தூர்), ராஜலட்சுமி (சாத்தான்குளம்), முக்கிய பிரமுகர்கள் ஆறுமுகநயினார், திருப்பாற்கடல், ராமச்சந்திரன், கோட்டைமணிகண்டன், வி.எம்.மகேந்திரன், சுரேஷ்பாபு, சவுந்திரபாண்டியன், மகாராஜன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள், துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo