Onetamil News Logo

உடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் போன்ற பிரச்சினைகள் ;தீர்வு

Onetamil News
 

உடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் போன்ற பிரச்சினைகள் ;தீர்வு 


தூத்துக்குடி, 2019 மார்ச் 5: உடலுக்கு முக்கியமான தேவையாக இருப்பதும், உடல் இயக்கங்கள் அனைத்தும் சரி வர இயங்க தேவையானதுமாய் இருப்பதும் இரத்தம் தான். இந்த இரத்தம் உடலுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்..! ஆனால் பலருக்கு இந்த இரத்தின் அளவானது 4-க்கு கீழ் எல்லாம் கூட இருக்கிறது... 
உடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத் தோன்றும்! எப்பொழுது பார்த்தாலும் களைப்பு, தூங்கவேண்டும் போல் இருக்கும், ஆனால் படுத்தால் தூக்கம் வராது. தூக்கம் வராததால் உடல் ஓய்வு பெறாமல் ஏற்படும் உடல் வலி, அதனால் ஏற்படும் அசதி. எழுந்து வேலை செய்ய சோம்பேறித்தனம். இந்த நிலையில்தான் இன்று பலபேர் இருக்கின்றனர்.நம்முடைய உடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் போன்ற பிரச்சினைகள் வருவதுண்டு. நம்முடைய உடலில் ரத்தத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டுமென்றால் அதற்கு நிச்சயம் நாம் செய்ய வேண்டியது நம்முடைய உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்வது தான்.
. கருப்பு உலர் திராட்சை நாட்டு மருந்து கடைகளில்  கிடைக்கும். அதனை வாங்கி, ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக் கொண்டு, அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள். காலையில் 6 மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். பிறகு மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள். இது போன்று செய்து வந்தால் இரத்தம் அதிகரிக்கும்.
                                                                                                                                                                                        
 உங்களுடைய உடம்பில் ரத்தத்தின் அளவு குறைவாக இருக்கிறதா நினைக்கிறீர்களா? அப்படி உங்களுடைய உடலில் ரத்தத்தை சீக்கிரமா அதிகப்படுத்தணுமா அதற்கு மிகவும் இன்றிமையாதது என்ன தெரியுமா? இரும்புச் சத்து, ஃபோலிக் அமிலம், வைட்டமின் சி ஆகியவை ஒன்றாக சீராகக் கலக்க வேண்டியது அவசியம். அப்படி சேர்வதற்கு நாம் தினமும் சாப்பிட வேண்டிய உணவுகள் முக்கியம். இதை குறிபிட்ட சீரான அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிரசவ காலங்களில் மற்றும் மாதவிலக்கு சமயங்களில் குறிப்பாக பெண்களுடைய உடலில் ரத்த சுழற்சி அதிக அளவில் நடக்கிறது. அந்த சமயங்களில் உடலின் ஊட்டச்சத்துக்கள் மிக சீரான அளவில் இருக்க வேண்டும். அதனால் தான் கர்ப்ப காலங்களில் பெண்களுக்கு இரும்புச் சத்து மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.முக்கியமாக கர்ப்பிணி பெண்களுக்கு இரத்தின் அளவானது அதிகமாக இருக்க வேண்டியது மிகமிக அவசியமான ஒன்றாகும். பல கர்ப்பிணி பெண்களை குறி வைத்து தாக்குவதே இந்த இரத்த சோகை தான்... ஹீமோகுளோபின் அளவு உங்களது ரத்தத்தில் குறைந்தால், உங்களுக்கு களைப்பு உடல் சோர்வு போன்ற பிரச்சனைகள் உண்டாகின்றன... இந்த ஹீமோகுளோபின் அளவை நீங்கள் இயற்கையாகவும் மிகவும் எளிமையாகவும் தினசரி சாப்பிடும் உணவுகளின் மூலமாகவே அதிகரிக்கலாம்.

நீங்கள் ஒருவேளை வெஜிடேரியன் உணவுப் பழக்கம் மட்டும் கொண்டவர்களாக இருந்தால் காய்கறிகள் மற்றும் கீரைகள் மூலம் இந்த மூன்று சத்துக்களையும் பெற முடியும்.
மாதுளை ,தர்பூசணி,பீட்ருட்,ஆப்பிள்,ஆரஞ்சு,பப்பாளி,திராட்சை,லிட்சி,வாழைப்பழம்,கொய்யாப்பழம்
ஆகிய பழங்கள் தினசரி உணவில் நிறைய எடுத்துக் கொள்வது நல்லது.

மேலே சொல்லப்பட்ட பழங்கள் எல்லாவற்றையும் சேர்த்து சாப்பிடலாம். அதுதவிர முட்டை (மஞ்சள் கருவும் சேர்த்து) சிக்கன் மீன் நண்டு இறால் சிப்பிகள்
காய்கறிகள் மற்றும் அசைவ உணவுகள், பழங்கள் தவிர்த்து வேறு எந்ததெந்த உணவுகளில் அதிக இளவில் இருக்கிறது என்றால
பேரிச்சம் பழம் ,பருப்பு வகைகள் பீன்ஸ், சோயா பீன்ஸ் வேர்க்கடலை சுண்டல் போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது.பீட்ரூட் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வைக்க பீட்ரூட் மிகுதியாக பரிந்துரைக்கப்படுகிறது. இரும்பு சத்து, ஃபோலிக் அமிலம், நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் இதில் வளமையாக உள்ளது. இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் உள்ள சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும்
பொதுவாக நாம் சாப்பிடும் இரும்புச் சத்துடைய உணவுகள் நம்முடைய உடலில் சரியாகச் சேர வேண்டுமென்றால் அதற்கு சரியான வகைகளில் வைட்டமின் சி உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை, ஜ்ட்ராபெர்ரி, தக்காளி போன்ற புளிப்பான பழங்கள் எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் கீரைகள், சுண்டல், பிரக்கோலி போன்ற ஃபோலிக் அமிலங்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.ஃபோலிக் அமிலம் வளமையாக உள்ள பச்சை இல்லை காய்கறிகள், ஈரல், அரிசி சாதம், முளைத்த பயறு, காய்ந்த பீன்ஸ், கோதுமை, சத்தூட்டப்பட்ட தானியங்கள், கடலை, வாழைப்பழம் மற்றும் ப்ராக்கோலி போன்ற உணவுகளை உட்கொள்ளுங்கள்.
நம்முடைய உடலில் இரும்புச் சத்து உடலில் சேர்வதைத் தடுக்கும் சில உணவுகளை நாம் சாப்பிடுகிறோம். அதை நாம் நிச்சயம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அவை என்னென்ன என்று இங்கே பார்க்கலாம். காபி டீ கோலா பீர் ஒயின் ஆல்கஹால் இவை எல்லாமே நம்முடைய உடலில் இரும்புச் சத்து சேர்வதைத் தடுக்கிறது.
நம்முடைய ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுப்பதே இந்த ஹீமோகுளோபின் தான். ரத்தத்தில் உள்ள இரும்புச்சத்து நிறைந்திருக்கிற புரதம் ஒன்று ரத்த சிவப்பு அணுக்களில் இருப்பது தான் அது.
ஆண்களுக்கு இதன் அளவு 14 முதல் 18 கிராம் / டெசி லிட்டர் அளவிலும் அதுவே பெண்களுக்கு 14 முதல் 16 கிராம் / டெசி லிட்டர் அளவிலும் இருக்க வேண்டியது அவசியம். இதைவிடக் குறைந்தால் ரத்த சோகை நோய் தாக்கும் அபாயம் இருப்பதாக அர்த்தம்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo