Onetamil News Logo

போதை ஆசாமி கேஸ் சிலிண்டரை திறந்துவிட்டு 4மணிநேரம் மிரட்டல் ;போலீசார் ,தீயணைப்பு வீரர்கள் படாதபாடு பட்டுவருகின்றனர்.

Onetamil News
 

போதை ஆசாமி கேஸ் சிலிண்டரை திறந்துவிட்டு 4மணிநேரம் மிரட்டல்;போலீசார் ,தீயணைப்பு வீரர்கள் படாதபாடு பட்டுவருகின்றனர்.


தூத்துக்குடி 2021 ஜனவரி 24 ;தூத்துக்குடி மேலசண்முகபுரம் பகுதியைச் சார்ந்தவர் ஜேம்ஸ் -சித்ரா தம்பதியினர் வசித்துவந்தனர். இந்த நிலையில் ஜேம்ஸ் தினமும் மதுகுடித்து மனைவியை வம்பிழுத்து சண்டை போடுவது வழக்கமாகும்.இந்த நிலையில் இன்று ஜேம்ஸ் போதையில் வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டரை திறந்து வைத்து மனைவியை மிரட்டி தற்கொலை முயற்சி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.                     
                ஜேம்ஸ் அதே பகுதியில் கூலித்தொழில் செய்துவருகிறார். கடந்த சில மாதங்களாக மதுகுடித்து சண்டை  அவர்களுக்குள் வந்துள்ளது. இதனால், வீட்டு வாடகை கூட முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதன் காரணமாக, ஜேம்ஸ்க்கும் அவரது மனைவி சித்ராவிற்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மன உளைச்சலுடன் காணப்பட்ட சம்ஸ் இன்று இரவு  8 மணியளவில் கேஸ் சிலிண்டரை படுக்கை அறைக்கு எடுத்து வந்துள்ளார். பின்னர், கேஸ் சிலிண்டரை முழுவதும் திறந்துவிட்டு அதனை பற்ற முயற்சித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் ,தீயணைப்பு வீரர்கள் போன்றோர் நேரில் பலமணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபரீத சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.. 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo