Onetamil News Logo

ஹரியானா காத்பூரியில் சாரண சாரணிய இயக்கம் சார்பில்; நடைபெற்ற 23-வது நேஷனல் அட்வன்ச்சர் முகாம்

Onetamil News
 

ஹரியானா காத்பூரியில் சாரண சாரணிய இயக்கம் சார்பில்; நடைபெற்ற 23-வது நேஷனல் அட்வன்ச்சர் முகாம்


தூத்துக்குடி  2019 ஏப்ரல் 7;தூத்துக்குடி மூன்றாவது மைல் சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளி சாரணர்கள் ஹரியானா காத்பூரியில் சாரண சாரணிய இயக்கம் சார்பில்; நடைபெற்ற 23-வது நேஷனல் அட்வன்ச்சர் முகாமில் கலந்து கொண்டு சான்றிதழ் பெற்றனர்.
ஹரியானா காத்பூரியில் 23வது நேஷனல் அட்வன்ச்சர் முகாம் ஐந்து நாட்கள் சாரண, சாரணிய இயக்க தேசிய இளையோர் சாகசம் முகாம் உதவி இயக்குநர் சித்தார்த்மொகந்தி தலைமையில் நடைபெற்றது. முகாமில் முதல்நாள் நிகழ்ச்சியாக கலந்து கொண்ட அனைத்து மாநில சாரண, சாரணியர்கள், பொறுப்பாசிரியர்கள் அறிமுகக்கூட்டம் நடைபெற்றது. அதன்பின் துப்பாக்கி சுடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இரண்டாவது நாள் மலையேற்றம், நடைபயணமாக காத்பூரி அருகில் உள்ள சிவன்கோவில் சென்று வந்தனர். இரவு உணவுக்குப் பின் பாடித்தீ நிகழ்ச்சி ஒவ்வொரு மாநில வாரியாக நடைபெற்றது. மூன்றாவது நாள் மெட்ரோ இரயிலில் லோட்டஸ் டெம்பிள், ரெட் ஃபோர்ட், இந்திய நுழைவுவாயில் ஆகியவற்றை பார்வையிட்ட பின் மதிய உணவுக்கு சாரண சாரணிய தேசிய தலைமையகத்திற்கு சென்றனர். அங்கு இயக்குநர்கள் சாரண, சாரணியர்களை பாராட்டி அனைவருக்கும் நினைவு பரிசுகளை வழங்கினார்கள்.
மாலை அக்ஷர்தாம் சென்று அங்கு சுற்றி பார்த்து மகிழ்ந்தனர். இரவு முகாமிற்கு வந்து ஓய்வு பெற்றனர். நான்காம் நாள் நிகழ்ச்சியாக “தூய்மை இந்தியா” என்ற நோக்கில் முகாமினை சுற்றிக் கிடந்த மட்கும், மட்கா குப்பை என்று பிரித்து சுத்தம் செய்யப்பட்டது. அனைவருக்கும் சீருடை வழங்கப்பட்டது. பின் அம்பு எய்தல் நிகழ்ச்சியில் அனைவருக்கும் 5 வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. அம்பு எய்தபின் ஹரியானா சிக்ரியில் உள்ள Funmax  நீர் விளையாட்டு நிகழ்ச்சி மாலை 5.00 மணி வரை நடைபெற்றது. இரவு மாநில குழுக்கள் வாரியாக பாடித்தீ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மாநிலம் சார்பில் சாரண, சாரணியர்கள் சிலம்பாட்டம் ஆடி அனைவரையும் மகிழ்வித்தனர். ஐந்தாம் நாள் காலை 6.30 மணியளவிலிருந்து தடை ஓட்டம், கயிறு ஏறுதல், மங்கி பிரிட்ஜில் நடத்தல், மிதவை கட்டைகள் மூலம் இரு மரங்களுக்கும் இடையில் நடத்தல், கயிற்று வலையில் ஏறி இறங்குதல், டயர்களுக்குள் உடலை வளைத்து நடந்து வருதல், குதிரையேற்றம் போன்ற பல்வேறு சாகச நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றனர். மதிய உணவுக்குப் பின் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
அட்வன்ச்சர் முகாமில் பயிற்சியாளர்கள் சுகான்ஷோகோரி,தன்ராஜ்ஷைனி ஆகியோர் பயிற்சியளித்தனர். தமிழகத்திலிருந்து தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளியிலிருந்து சாரண, சாரணிய பொறுப்பாசிரியர்கள் பிரித்விராஜ், ராஜ்பரத், சுகந்தி, பிரியங்கா,அபிராமி ஆகியோரும் சாரணர்கள் மணியழகன், மனோஜ்குமார், பாலகணேஷ், மலையரசுகுமார் ஆகிய ஒன்பது நபர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி அனுமதி அளித்த சாரண, சாரணிய மாநில பொறுப்பாளர்களுக்கும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட முதன்மை ஆணையர் அவர்களுக்கும், மாவட்ட சாரண சாரணிய இயக்கத்தின் மாவட்ட செயலாளர் எட்வர்ட் ஜான்சன்பால் அவர்களுக்கும் பள்ளியின் சார்பில் பள்ளியின் முதல்வரும், மாவட்ட பயிற்சி ஆணையருமான (சாரணியர் பிரிவு) ஜெயாசண்முகம் அவர்கள் நன்றி பாராட்டினார். சாரண சாரணியர்களை மாவட்ட ஆணையர் சு.சண்முகம்  வழிநடத்தி சென்று வந்தார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo