Onetamil News Logo

தூத்துக்குடியில் ஆட்டைத் திருடிய  2பேர் கைது 

Onetamil News
 

தூத்துக்குடியில் ஆட்டைத் திருடிய  2பேர் கைது 


தூத்துக்குடி ,2019 செப் 12 ;தூத்துக்குடி முத்தம்மாள் காலனி 3வது தெருவைச் சேர்ந்தவர் பொன்ராஜ் மகன் பொன்னுதுரை(33). இவர் தனது ஆடுகளை வீட்டின் முன்பு கட்டி வைத்துள்ளார்.
இந்நிலையில் 10ம் தேதி அன்று தூத்துக்குடி வட்டகோவில் தெருவைச் சேர்ந்த முத்துதுரை(29) மற்றும் தூத்துக்குடி, போல்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுயம்புலிங்கம் மகன் இசக்கிராஜா(34) ஆகிய இருவர் இருசக்கர வாகனத்தில் வந்து பொன்னுதுரை வீட்டில் கட்டி வைத்திருந்த அவரின் ஆட்டை திருடி கையும் களவுமாக பிடிபட்டனர்.
இதுகுறித்து பொன்னுத்துரை அளித்த புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்து கணேஷ் வழக்கு பதிவு செய்து முத்துதுரை மற்றும் இசக்கிராஜா ஆகிய இருவரையும் கைது செய்தார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo