Onetamil News Logo

போலீஸ்காரர் முத்துராஜ் சிறையில் அடைப்பு ;போலீசை கைது செய்து சிறையில் அடைக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. 

Onetamil News
 

போலீஸ்காரர் முத்துராஜ் சிறையில் அடைப்பு ;போலீசை கைது செய்து சிறையில் அடைக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. 


தூத்துக்குடி 2020 ஜூலை 04; சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் தேடப்பட்ட போலீஸ்காரர் முத்துராஜ் அதிரடியாக நேற்று மாலை கைது செய்யப்பட்டு இன்று  காலை சிறையில் அடைக்கப்பட்டார்.
சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் தாக்கினர். இதைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரும் உயிரிழந்தனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.இந்த விசாரணை அடிப்படையில் வழக்கை கொலை வழக்காக மாற்றி, சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், ஏட்டு முருகன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களை தூத்துக்குடி தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு ஹேமா முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் போலீஸ்காரர் முத்துராஜ் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால் அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேடிவந்தனர். அவருடைய செல்போன் சிக்னலை வைத்து போலீசார் இருப்பிடத்தை அறிய முயன்றனர்.அதன்படி வேப்பலோடை அருகே உள்ள அவரது சொந்த ஊரில் கடைசியாக சிக்னல் கிடைத்து உள்ளது. அதன்பிறகு அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டு உள்ளது. இதனால் சி.பி.சி.ஐ.டி போலீசார் அந்த ஊருக்கு சென்றனர். ஆனால், அங்கு இருந்து அவர் தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி போலீசார், முத்துராஜூடன் கடைசியாக பேசியவர்கள் விவரங்களை சேகரித்து, அவர்கள் மூலம் முத்துராஜின் இருப்பிடத்தை அறிவதற்கான முயற்சியில் ஈடுபட்டு உள்ளதாக தெரிகிறது. அவரை தேடும் வேட்டையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.இந்த நிலையில் முத்துராஜின் மோட்டார் சைக்கிள் பசுவந்தனை அருகே உள்ள கீழமங்கலம் காட்டுப்பகுதியில் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.இதற்கிடையே, விளாத்திகுளம் அருகே உள்ள பூசனூர் பகுதியில் முத்துராஜ் சுற்றித்திரிவதாக விளாத்திகுளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று முத்துராஜை மடக்கி பிடித்து கைது செய்து, போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று இன்று அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு இன்று தூத்துக்குடி தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு ஹேமா முன்னிலையில் ஆஜர்படுத்தி பேரூரணி சிறையில் அடைத்தனர்.பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo