Onetamil News Logo

தூத்துக்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் சர்வர்கள் வேலை செய்யவில்லை மாற்று வழி ஏற்பாடு இல்லை பொது மக்கள் புலம்பல் ; தூத்துக்குடி பத்திரப்பதிவு அலுவலகம் வெறிச்சோடிக்கிடக்கிறது.

Onetamil News
 

தூத்துக்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் சர்வர்கள் வேலை செய்யவில்லை மாற்று வழி ஏற்பாடு இல்லை பொது மக்கள் புலம்பல் ; தூத்துக்குடி பத்திரப்பதிவு அலுவலகம் வெறிச்சோடிக்கிடக்கிறது.சுமார் 10 லட்சம் அரசுக்கு வருவாய் இழப்பு 


                                               
தூத்துக்குடி பிப் 13 ;                                                                                                                                                  
தூத்துக்குடி பதிவு மாவட்டத்தில் 13 சார்பதிவகங்கள் செயல்படுகின்றன நேற்று தமிழக முதலமைச்சர் ஸ்டார் 2.0 திட்டத்தை நேற்று தொடங்கினார் இன்று ஆன்லைன் வேலைகள் முடங்கியது எல்லாப்பத்திர பதிவுகளும் ஆன்லைனில் தான் பதிவு  செய்யப்படும் என்றனர் ஆனால் இந்த திட்டம் ஆரம்பித்த முதல் நாளிலே  சர்வர் முடங்கி விட்ட காரணத்தினால் எந்த பத்திரமும் பொதுமக்களுக்கு பதிவு செய்ய முடியாமல் சிரமத்துக்குள்ளாகினார்கள். இதனால் இன்று காலையிலிருந்து பத்திரப்பதிவு ஒன்று கூட பதிவு செய்யபடவில்லை வில்லங்கம், நகல் மனு, திருமண பதிவு, போன்றவை எந்தப்பதிவு செய்ய இயலாது பொதுமக்கள் வெளியூர் மக்கள் போன்றோர் மன உலைச்சலில் திரும்பினார்கள் மிகவும் வயதான முதியோர்கள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் அனைவரும் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள் 
சர்வர்கள்; வேலை செய்யவில்லை மாற்று வழி ஏற்பாடு இல்லை மக்கள் புலம்பல்
பத்திர பதிவு துறையில் ஸ்டார் 2.0 திட்டத்தை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார்.ஆனால் இன்று வேலை செய்யாததால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.இதனால் இன்று தூத்துக்குடி பத்திரப்பதிவு அலுவலகம் வெறிசோடிக்கிடக்கிறது. சுமார் 10 லட்சம் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
                                                                                                                                                                                                     
முதல்வர் துவக்கிய ஸ்டார் 2.0 திட்டம்:
பொது மக்கள் தங்களது ஆவணப்பதிவு தொடர்பான தேவைகளை விரைவாக பூர்த்தி செய்து  கொள்ள ஏதுவாக ஒருங்கிணைந்த இணையதள அடிப்படையிலான மென் பொருள் தயாரிக்கப்படும் என்ற ஜெயலலிதாவின் அறிவிப்பிற்கு இணங்க ரூபாய் 176 கோடியே 44 லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வலை அடிப்படையிலான ஸ்டார் 2.0 திட்டத்தையும் அதற்காக மேம்படுத்தப்பட்ட இணையதளத்தையும் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தொடங்கி வைத்தார் இத்திட்டத்தில் மூலம் உரிய முறையில் வீட்டிலிருந்தபடியே பொதுமக்கள் தாங்களாகவே இணை வழி ஆவணங்களை உருவாக்கும் வசதி உரிய ஆதாரங்களுடன் பதிவுக்கு முன்பே இணையதளம் வழியாக அனுப்பி சரிபார்க்கும் முறை அலுவலக வருகைக்கு முன் பதிவு செய்யும் வசதி ஆவணங்களை 10 நிமிடத்தில் பதிவு செய்து ஒரே வருகையில் திரும்ப வழங்கும் வசதிகள் உள்ளன.
                                                                                                                                                                                     
 இணையதளம:;
மேலும், குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல்  வாயிலாக  உடனுக்குடன் ஆவண நிலை பற்றிய தகவல் தெரிவிக்கும் வசதி, இணையவழி கட்டணம் செலுத்தும் முறை, ஆவணப்பதிவின் போது மோசடிப் பத்திரப்பதிவுகளை தவிர்க்க முந்தைய ஆவணதாரருக்கு குறுஞ்செய்தி அனுப்புதல், அவரின் கைரேகையை ஒப்பிட்டு செய்து ஆள் மாறாட்டத்தை தடுக்கும் புதிய வசதி, கட்டணமில்லா தொலைபேசி வழி,  பொது மக்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வசதி இருக்கிறது.
                                                                                                                                                 மக்கள் பயன்:
பதிவுக்குப்பின் பட்டாமாறுதல் மனுக்களை இணையவழி உடனுக்குடன் வருவாய்த்துக்கு அனுப்பி பொது மக்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் ஒப்புகை சீட்டு அனுப்பும் புதிய நடைமுறை, இணையவழி கட்டணமில்லா வில்லங்கச்சான்று பதிவிறக்கம் செய்யும் வசதியானது 30 ஆண்டுகளாக  42 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு (1975 முதல் )இணையவழி மின் கையெப்பமிட்ட ஆவண நகல் மற்றும் வில்லங்கச்சான்று பெறும் வசதி போன்ற வசதிகளை பொதுமக்கள் பெற்று பயன் பெற முடியும்.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo