காவலர் நிறைவாழ்வு பயிற்சி” பட்டறையின் 3 நாட்கள் பயிற்சியின் நிறைவு நாளான இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்
தூத்துக்குடி 2020 நவம்பர் 29 ;காவலர் நிறைவாழ்வு பயிற்சி” பட்டறையின் 3 நாட்கள் பயிற்சியின் நிறைவு நாளான இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
இப்பயிற்சியானது மன அழுத்தத்தை போக்குவதற்காக தமிழக அரசு காவல்துறையினரின் ‘காவலர் நிறை வாழ்வு பயிற்சியை” (Well Being Programme) ஆரம்பித்து காவல்துறையினர் அனைவருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலானவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதில் பயிற்சி பெறாதவர்கள் 40 பேருக்கு கடந்த 27.11.2020 அன்று ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 3 நாட்கள் பயிற்சி நிறைவு பெற்றது.
இதில் கலந்து கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பேசுகையில் மன அழுத்தம் என்பது காவல்துறையினருக்கு மட்டுமல்ல, எல்லா துறையினருக்கும் உள்ளது. மன அழுத்தத்தை போக்க காவல்துறையினர் கிடைக்கும் நேரத்தை கெட்ட வழிகளில் செலவிடாமல், தனக்காகவும், தன் குடும்பத்திற்காகவும் செலவிட வேண்டும். நல்ல நெறிமுறைகளை கடைப்பிடித்து மன அழுத்தத்தில் இருந்து விடுபட வேண்டும். காவல்துறையினர் எப்போதும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். மேலும் இப்பயிற்சியில் கற்றுக்கொண்டதை குடும்பத்திலும் பணியிடங்களிலும் செயல்படுத்தினால் மன அழுத்தம் இல்லாமல் சிறப்பாக செயல்படலாம் என்று சிறப்புரையாற்றி பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர் மீஹா, நாகலெட்சுமி, மன நல ஆலோசகர் ஜெயக்குமார் உட்பட காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். மேலும் பயிற்சி பெறும் காவலர்கள் மற்றும் நிறைவு நாளான இன்று இப்பயிற்சியில் கலந்து கொண்டனர்.