Onetamil News Logo

மேலஆத்தூர் அருகே தாமிரபரணி ஆற்று கரையை தனிநபர் ஆக்கிரமிப்பு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், வெள்ளக்கரை உடையும்  அபாயம் ;போர்கால அடிப்படையில் முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுக்க  கோரிக்கை 

Onetamil News
 

மேலஆத்தூர் அருகே தாமிரபரணி ஆற்று கரையை தனிநபர் ஆக்கிரமிப்பு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், வெள்ளக்கரை உடையும்  அபாயம் ;போர்கால அடிப்படையில் முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுக்க  கோரிக்கை 


தூத்துக்குடி 2020 ஜூலை 30 ;திருச்செந்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட மேலஆத்தூர் கிராமம், அருந்ததியர் குடியிருப்பு அருகில் தாமிரபரணி ஆற்று வெள்ளக்கரையை தனிநபர் ஆக்கிரமிப்பு, வெள்ளக்கரையை ஜேசிபி இயந்திரம் மூலம் விரிவு படுத்தி, சேதப்படுத்தியுள்ளார், இதனால் மழைக்காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால்,வெள்ளக்கரை உடையும்  அபாய நிலையில் உள்ளது. இதனால், மிகப் பெரிய,அளவில், உயிர் சேதமும், பொருட்சேதமும்,ஏற்பட வாய்ப்புஉள்ளது, ஆகவே போர்கால அடிப்படையில் முன்னெச்செரிக்கை நடவடிக்கையும்,இது சம்பந்தமாக தனி நபர் ஆக்கிரமைப்பை அகற்ற வலியுறுத்தியும்,வெள்ளக்கரையை (தடுப்பு சுவர்) கான்கிரீட் சுவரால் பலப்படுத்துமாறு... ஆதித்தமிழர் பேரவை,சோ.அருந்ததி அரசு மாநில துணைப் பொதுச்செயலாளர்,காயல்முருகேசன்,மற்றும்  மேலஆத்தூர் கிராமம் அருந்ததியர் ஊர் மக்களான, ஆண்டி,சோமு,சரவணன், கணேசன், கருப்பசாமி, சுந்தர்ராஜ், நடராஜன், முனியசாமி,மகளிரணி தோழர்கள், விஜயலெட்சுமி, பொன்னுலெட்சுமி,வீரலெட்சுமி,சந்திரா, பகவதி,சிவகாமி, சார்பாக தூத்துக்குடி மாவட்ட துணை ஆட்சியர் அவர்களிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo