Onetamil News Logo

தூத்துக்குடி முத்தாரம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா ;12ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

Onetamil News
 

தூத்துக்குடி முத்தாரம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா ;12ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


தூத்துக்குடி 2019 பிப்ரவரி 10 ;தூத்துக்குடி வடக்குரத வீதியில் அமைந்துள்ள அருள்மிகு முத்தாரம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
தூத்துக்குடி வடக்குரத வீதியில் அமைந்துள்ள அருள்மிகு முத்தாரம்மன் கோவில் மகா கும்பாபிஷேக  காலை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த 7ம் தேதி பூஜை மஹாகணபதி பூஜையுடன் யாக சாலை தொடங்கி நான்கு நாட்கள் நடைபெற்றன.
காலை ஸ்ரீ முத்தாரம்மன் கோவில் கோபுர கலசத்திற்கும் விநாயக பெருமானுக்கும், மூலஸ்தான அம்பிகைக்கும் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 12ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற கும்பாபிஷேகத்தை தூத்துக்குடி சிவன் கோவில் சங்கர பட்டர், திருச்செந்தூர் குமார் பட்டர் ஆகியோர் நடத்தி வைத்த‌னர். விழாவில் பெருங்குளம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்திய ஞான பரமாச்சார்ய சுவாமிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். தொடர்ந்து இன்று காலை அன்னதானம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.   மாலை முத்தாரம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம், நவசக்தி அர்ச்சனை, தீபாராதனை வழிபாடு நடபெற்றது. இரவு முத்தாரம்மன், திருவீதி உலா வரும் நிகழ்ச்சி அர்ச்சகர் பத்மநாதாபன் தலைமையில் நடந்த‌து.
நிகழ்ச்சிகளில் தூத்துக்குடி எம்எல்ஏ., கீதாஜீவன், வஉசி கல்லுாரி செயலாளர் ஏபிசிவி சண்முகம், வஉசி பேரவை தலைவர் சரவணபெருமாள், அதிமுக மாவட்ட செயலாளர் சி.த. செல்லபாண்டியன், பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், தொழிலதிபர் டிஏ தெய்வநாயகம்  உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருப்பணி மற்றும் கும்பாபிஷேக விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo