Onetamil News Logo

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி கருணாநிதி எம்.பி தலைமையில் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம்

Onetamil News
 

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி கருணாநிதி எம்.பி தலைமையில் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம்


தூத்துக்குடி 2019 மார்ச் 14 ;தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி கருணாநிதி எம்.பி தலைiமையில் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் : அனைவரும் கலந்து கொள்ள வடக்கு மாவட்ட  தி.மு.க. பொறுப்பாளர்  பி. கீதா ஜீவன் எம்.எல்.ஏ   அழைப்புவிடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது... தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஏப்ரல் 18-ல் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி ஆகியவற்றில் தி.மு.க.ம்றறும் கூட்டணிக் கட்சிகள் இணைந்து பணியாற்றுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர்  கனிமொழி கருணாநிதி  தலைமையில் கூட்டணிக் கட்சிகளின் மாவட்டச் செயலாளர்கள் முன்னிலையில் 15.03.2019 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி அளவில் தூத்துக்குடி கலைஞர் அரங்கில் வைத்து நடைபெற இருக்கிறது. 
இக்கூட்டத்தில் தி.மு.க மற்றும் கூட்டணிக்  கட்சிகளின்  மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பேரூர்க் கழக அளவிலான நிர்வாகிகள் மற்றும்  பல்வேறு சார்பு அணிகளின் நிர்வாகிகளும் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo