Onetamil News Logo

தூத்துக்குடி அருகே கீழப்பூவாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு அரையாண்டுத்தேர்வில் 100% தேர்ச்சி ; மாணவ,மாணவிகளுக்கும் ஊக்கத்தொகை வழங்கும் விழா 

Onetamil News
 

தூத்துக்குடி அருகே கீழப்பூவாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு அரையாண்டுத்தேர்வில் 100% தேர்ச்சி ; மாணவ,மாணவிகளுக்கும் ஊக்கத்தொகை வழங்கும் விழா   


தூத்துக்குடி 2020 ஜனவரி 21 ;தூத்துக்குடி அருகே கீழப்பூவாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு அரையாண்டுத்தேர்வில் 100% தேர்ச்சி ; மாணவ,மாணவிகளுக்கும் ஊக்கத்தொகை வழங்கும் விழா நடந்தது.            தூத்துக்குடி அருகே கீழப்பூவாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு அரையாண்டுத்தேர்வில்  100% தேர்ச்சி பெற்றமைக்கு ஆதவா தன்னார்வ தொண்டு நிறுவனம் மற்றும் பள்ளிக் கல்வித்துறையும் இணைந்து மாணவர்களைப் பாராட்டி அவர்களின் கல்வித்தரம் மேன்மையடைய மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இதில் தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர் .வசந்தா  தலைமை தாங்கினார்கள.; பள்ளியின் தலைமை ஆசிரியர்  சு.கஜேந்திரபாபு  முன்னிலை வகித்தார்கள். ஆதவா தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிறுவனத் தலைவர்  பாலகுமரேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள். மாணவர்களின் கல்வித்தரம் உயரவும்  அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறவும், அனைவரும் தேர்ச்சி பெறவும் பல நல்ல அறிவுரைகளை வழங்கினார்கள்.பத்தாம்; வகுப்பு அரையாண்டுத் தேர்வில்  100% தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் ஊக்கத்தொகையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் இருபால் ஆசிரியர்களும்,அலுவலர்களும் மற்றும் மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர். இறுதியாக ஆசிரியர் மஆனந்த ராமசுப்பிரமணியன்  நன்றியுரை நல்கினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo