Onetamil News Logo

அய்யா ஏன் உலக நடப்பை பற்றி முன் அறிவிப்பு செய்தார்? -ஆல் இந்தியா ஹியூமன் ரிஸோர்ஸ் பெடரேஷன்  தலைவர்,வழக்கறிஞர் ஜெயச்சந்திரன்,

Onetamil News
 

அய்யா ஏன் உலக நடப்பை பற்றி முன் அறிவிப்பு செய்தார்? -ஆல் இந்தியா ஹியூமன் ரிஸோர்ஸ் பெடரேஷன்  தலைவர்,வழக்கறிஞர் ஜெயச்சந்திரன்,தூத்துக்குடி 2020 மார்ச் 26 ; அய்யா ஏன் உலக நடப்பை பற்றி முன் அறிவிப்பு செய்தார்? ;சிறிய நாடு முதல் வல்லர நாடுவரை செய்வது அறியாது நிலைகுலைந்து போய் உள்ளனர்.
இதுகுறித்து  ஆல் இந்தியா ஹியூமன் ரிஸோர்ஸ் பெடரேஷன்  தலைவர்,வழக்கறிஞர் ஜெயச்சந்திரன்,கூறியதாவது....இந்த மண்ணகத்து மக்களெல்லாம் விண்ணகத்து வேந்தனான அய்யா வைகுண்டப் பரம்பொருளை அடைய வேண்டி வழிக்காட்ட அகிலத்திரட்டு அம்மானை மற்றும் அருள் நூல் என்னும் புனித நூல்களை கொடுத்தார். அந்த புனித நூல்களில் வைகுண்ட அவதார வரலாறு மற்றும் வாழ்வியல் நெறிகளை சொன்னதோடு, இந்த கலியுகத்தில் என்ன என்ன நிகழ்வுகள் நடக்கும் என்பதையும் முன்னறிவிப்பாக கூறியுள்ளார். அய்யாவின் முன்னறிவிப்புகள் ஒவ்வொன்றாக தப்பாது நடந்து வருகிறது. தற்போது உலகில் ஏதேனும் புதிய நிகழ்வுகள் நடந்தால் அதை பற்றியும் வைகுண்டர் சொல்லியிருப்பாரே என்று மக்கள் சொல்லும் அளவிற்கு இன்று அய்யா வைகுண்டர் கூறியது அனைத்தும் நடந்து வருகிறது.
இன்று உலக மக்களையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொடிய கொரணா வைரஸ்  பற்றி வைகுண்டப் பரம்பொருள் சொல்லியுள்ளாரா என்று பார்க்கும் போது, சொல்லியுள்ளார் என்கிற பதில் நம்மை மேலும் வியப்படைய செய்கிறது. ஆம் கொரொணோ என்று நோயின் பெயரை குறிப்பிடாவிட்டாலும், இது போன்ற நோயைப் பற்றி குறிப்பிட்டுள்ளதை அறிய முடிகிறது.
அய்யா தந்த அருள்நூலில் நடுத்தீர்வை உலா என்னும் பகுதியில் உலக நடப்பைப் பற்றி சொல்லும் போது
"தீங்கான நோய் பெருகும் பான்மை வையகம் பாழாகும்"
என்கிறார். இன்றைய காலங்களில் எத்தனையே தீங்கான நோய்கள் புதிது புதிதாக வந்து கொண்டிருப்பதை நாம் காண்கிறோம். இப்படி பெருகி வரும் நோயின் புதிய வரவே இன்றைய கொரோணா வைரஸ் ஆகும். இந்த கொடிய வைரஸ் இன்று வையகத்துக்கே பெரும் தீங்கினை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. வையகமே பாழாகும் என்கிற மொழிப்படியே மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கையை தொலைத்து நிற்கின்றனர். சிறிய நாடு முதல் வல்லர நாடுவரை செய்வது அறியாது நிலைகுலைந்து போய் உள்ளனர்.
மேலும் இவ்வாறு உருவாகின்ற நோய்கிருமிகள் காற்றின் மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவி பெரும் தீங்கினை சமூகத்துக்கு ஏற்படுத்தும் என்பதையும்  அகிலத்திரட்டில் உலக நிகழ்வுகள் பற்றி கூறும் பகுதியில்
"வாயுவது நோய் வீசும்" 
என்று சொல்லியுள்ளார். ஆம் இன்றைய உலக நிலைமையும் அய்யாவின் முன் அறிவிப்பு படியே நடக்கிறது. நமது உயிரான காற்றே உயிரை கொல்லும் நோயை பரப்பும் தன்மையுடன் காணப்படுகிறது. 
அய்யா சிவகாண்ட அதிகார பத்திரம் இந்த உலகில் நடைபெற இருக்கின்ற அழிவுகள் பற்றிய விவரங்களை சொல்லும்போது "பெரும் சுரத்தால் அழிவு" என்பார். முன்பெல்லாம் காய்ச்சல் என்பது ஒரு சாதாரண நோய் ஆகும். ஆனால் இன்றோ காய்ச்சலை கண்டு அஞ்சும் வகையில் பல வகையான காய்ச்சல் காணப்படுகின்றது.  இன்று உலகில் பெரும்பாலும் நோய் மரணங்கள் காச்சலினாலேயே ஏற்படுகிறது. அதைத்தான் அய்யா பெரும் சுரத்தால் அழிவு என்கிறார். இப்போது பல ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கும் கொரணொ வைரஸும் ஒருவரை விட்டு மற்றொருவருக்கு காற்றின் மூலம் பரவி பாதிப்பை ஏற்படுத்தி, இறுதியில் காய்ச்சலை ஏற்படுத்தி மரணத்தை ஏற்படுத்துகிறது. 
இங்கு அன்பர்கள் அனைவரும் ஒரு உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.  அய்யா கலியுகத்தில் நடக்கும் நிகழ்வுகளை முன்பே கூறினாரே தவிர இப்போது நடப்பதற்கு எல்லாம் அவர் பொறுப்பல்ல, நாம் தாம் எல்லாவற்றுக்கும் காரணம் ஆவோம்.  இறைவன் உலகில் எதிர்காலத்தில் நடக்கும் நிகழ்வுகளை முன்பே சொல்வதில் ஒன்றும் ஆச்சரியமும் அதிசயமும் இல்லை. அப்படி இருக்க  இறைவனான வைகுண்ட பரம்பொருள் இந்த உலகின் எதிர்கால நிகழ்வுகளை பற்றி சொல்லியுள்ளார் என்றால் என்ன காரணமாக இருக்கும் என்று பார்ப்போம். அப்போதாவது இந்த உலக மக்கள் எல்லாம் இறைவனின் கலியுக அவதாரத்தை உணர்ந்து, அவர் சொல்லிய தர்ம வழியில் நடந்து நல்மக்களாக வாழ்ந்து இறைவன் அமைக்க இருக்கும் தர்மயுகத்தை அடைவார்கள் என்பதாலே ஆகும். நாம் ஒவ்வொருவரும் இறைவனின் பாதையில் செல்கிறோமா என்று நம்மை நாமே கேட்டுக்  கொள்ள வேண்டிய தருணம் ஆகும்.             தற்போது உலகில் எல்லாமே எது உண்மை எது பொய் என கண்டுபிடிக்கமுடியவில்லைபோலி மதசாமியார்களும் கபடசன்னியாசிகளும் பெருகிவிட்டனர்.
சத்தியத்தில் குடியிருந்தால் சாமி துணையாய் வருவேன்..
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo