Onetamil News Logo

தூத்துக்குடி அருகே மாசார்பட்டி போலீஸ் எஸ்.ஐ  லாரி மோதி பலி ;பழுதாகி  நின்றுகொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் மோதிய பரிதாபம் 

Onetamil News
 

தூத்துக்குடி அருகே மாசார்பட்டி போலீஸ் எஸ்.ஐ  லாரி மோதி பலி ;பழுதாகி  நின்றுகொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் மோதிய பரிதாபம் 


தூத்துக்குடி 2020 பிப்ரவரி 23 ; தூத்துக்குடி அருகே மாசார்பட்டி போலீஸ் எஸ்.ஐ  லாரி மோதி பலியானர். 
தூத்துக்குடி மாவட்டம் மாசார்பட்டி காவல் நிலைய சரகம் மாசார்பட்டி காவல் உதவி ஆய்வாளர் சிவசுப்பிரமணியம் என்பவர் 22.02.2020 தேதி இரவு. சுமார். 10.45 மணிக்கு அச்சங்குளம் கிராமத்தில் அந்தோணி முருகன் என்பவரை சிலர் வெட்ட வருவதாக கிடைத்த போன் தகவலின்படி மேற்படி காவல் உதவி ஆய்வாளர்  மேலக்கரந்தை கிராமத்தில் இரவு ரோந்து பணியில் இருந்தவர்  அச்சம் குளம் கிராமத்திற்கு தனது இருசக்கர வாகனம் ஆன TN69A. 8055 என்ற பல்சர் வாகனத்தில் சென்றபோது NH38 மதுரை டு தூத்துக்குடி ரோட்டில்  மேலக்கரந்தை கிராமத்திற்கு தேசிய நெடுஞ்சாலையில் ஏற்கனவே பழுதாகி  நின்றுகொண்டிருந்த TN.69.U.3399 என்ற கண்டைநேர்  லாரியின் பின்புறத்தில் மோதியதில் காவல் உதவி ஆய்வாளர் சிவசுப்ரமணியம் சம்பவ இடத்திலேயே  சுமார் இரவும்.11.00 மணி அளவில் இறந்துவிட்டார் இவர். 01.02.2011 ஆம் ஆண்டு காவல்துறையில் பணிக்கு சேர்ந்துள்ளார் இவருக்கு திருமணமாகி இரண்டரை வயது பெண் குழந்தை உள்ளது மேலும் 7 மாதம் மனைவி கர்ப்பமாக உள்ளார் மனைவியின் பெயர் சுப்புலட்சுமி என்பதாகும் குழந்தையின் பெயர்  சக்திஸ்ரீ என்பதாகும் மேற்படி நபர் 25. 02.2019 முதல் மாசார்பட்டி கவனத்தில் பணி செய்து வருகிறார் மாசார்பட்டி  காவல் நிலையத்திற்கு வரும் முன்பு தட்டார் மடம்  காவல் நிலையத்தில் பணி செய்து வந்துள்ளார்  இவரது சொந்த ஊர் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகாவில் உள்ள குருவிகுளம் காவல் நிலைய  சரக திற்கு உட்பட்ட அத்திபட்டி கிராமம் ஆகும்.  காவல் உதவி ஆய்வாளர் அவர்கள் உடல் கோவில்பட்டி  அரசு மருத்துவமனைக்கு பிரேத பிரச்சனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo