Onetamil News Logo

மதுபோதையில் அரசு பேருந்தை வழிமறித்து ஓட்டுநரிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்த ரவுடி உட்பட 2 பேர் கைது  

Onetamil News
 

மதுபோதையில் அரசு பேருந்தை வழிமறித்து ஓட்டுநரிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்த ரவுடி உட்பட 2 பேர் கைது  


சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மதுபோதையில் அரசு பேருந்தை வழிமறித்து ஓட்டுநரிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்த ரவுடி உட்பட 2 பேர் கைது செய்தனர்.
             சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புளியங்குளம் பேருந்து நிறுத்தம் பகுதியில் நேற்று (26.09.2022) திருநெல்வேலியில் இருந்து சாத்தான்குளம் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்தை 2 மர்ம நபர்கள் மதுபோதையில் வழிமறித்து ஓட்டுநரிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
              இதுகுறித்து மேற்படி அரசு பேருந்தின் ஓட்டுனரான திருநெல்வேலி சாந்திநகர் திம்மராஜபுரம் பகுதியை சேர்ந்த செல்லையா மகன் ஜான் இன்பராஜ் (59) என்பவர் அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் கருங்கடல் மேல பனைக்குளம் பகுதியைச் சேர்ந்த சூசை மகன் ராஜா சிங் (38) மற்றும் பழனியப்பபுரம் பகுதியைச் சேர்ந்த காந்திராஜ் மகன் துரைசிங் (46) ஆகிய இருவரும் மதுபோதையில் மேற்படி அரசு பேருந்தை வழிமறித்து தகராறு செய்தது தெரியவந்தது.
           இதனையடுத்து சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரன், உதவி ஆய்வாளர் ரத்தினராஜ் மற்றும் போலீசார் மேற்படி எதிரிகளான ராஜா சிங் மற்றும் துரைசிங் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். ராஜா சிங் மீது ஏற்கனவே சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 5 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo