Onetamil News Logo

தூத்துக்குடியில் இளம்பெண் கொலையில் கைதான கள்ளக்காதலன் பரபரப்பு வாக்கு மூலம் 

Onetamil News
 

தூத்துக்குடியில் இளம்பெண் கொலையில் கைதான கள்ளக்காதலன் பரபரப்பு வாக்கு மூலம் 


தூத்துக்குடி 2019 ஜூலை 13 ;தூத்துக்குடியில் இளம்பெண் கொலையில் கைதான கள்ளக்காதலன் பரபரப்பு வாக்கு மூலம்  அளித்துள்ளார்.
தூத்துக்குடி மில்லர்புரம் பாரதிநகர் 5-வது தெருவை சேர்ந்தவர் நடேஷ் என்ற நடேசன் (வயது 34). இவர் உடன்குடி அருகே கல்லாமொழியில் அமைக்கப்பட்டு வரும் அனல்மின் நிலையத்தில் என்ஜினீயராக உள்ளார். இவருடைய மனைவி மகாராணி (28) இவர்களுக்கு விம்ரித் (5) என்ற மகன் உள்ளான்.
இந்த நிலையில் நேற்று காலையில் நடேசன் வேலைக்கு சென்று விட்டார். மகாராணி அருகே உள்ள பள்ளிக்கூடத்தில் மகனை விட்டு விட்டு வீடு திரும்பினார். அதன் பின்னர் மதியம் 1 மணி அளவில் அருகே உள்ள ராஜூவ்நகரில் வசித்து வரும் மகாராணியின் தந்தை உலகமுத்து தனது மகளை பார்க்க வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் மகாராணி உயிருக்கு போராடி கொண்டு இருந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உலகமுத்து, மகாராணியை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே மகாராணி பரிதாபமாக உயிர் இழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் சம்பவ இடத்தை பார்வையிட்டார். தடயவியல் துறை இணை இயக்குனர் கலாலட்சுமி தலைமையில் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். பின்னர் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் சம்பவம் நடந்த வீட்டில் இருந்து வேகமாக ஓடி, அருகே உள்ள எஸ்.எம்.பி.நகர் வரை சென்றது. பின்னர் திரும்பி வந்து விட்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லைநாகராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார் 
 இந்த நிலையில் தூத்துக்குடி அரிராம்நகர் 2-வது தெருவை சேர்ந்த சுப்புராஜ் மகன் இளவரசன் (25) கடந்த 3-ந்தேதி தென்காசி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் சரண் அடைந்தார். அவரை தூத்துக்குடி சிப்காட் போலீசார், காவலில் எடுத்து கைது செய்து விசாரித்தனர்.
அப்போது இளவரசன் போலீசாரிடம்  கூறியதாவது:-மகாராணிக்கும், எனக்கும் 4 ஆண்டுகள் பழக்கம் இருந்தது. இது கள்ளக்காதலாக மாறியது. அவருடைய மகனை பள்ளிக்கூடத்துக்கு அழைத்து செல்வது, பின்னர் வீட்டுக்கு அழைத்து வருவது எல்லாம் நான் தான் செய்து வந்தேன். மகாராணியின் கணவர் வெளிநாட்டில் இருந்ததால் நானும், மகாராணியும் பல நேரங்களில் தனிமையில் இருந்துள்ளோம். இதனால் எனக்கு மகாராணி மீது அளவுக்கு அதிகமாக அன்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் மகாராணியின் கணவர் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு திரும்பினார். இதனால் மகாராணி என்னிடம் பேசுவதை குறைத்துக் கொண்டார்.
சில நாட்களுக்கு முன்பு அவரிடம், நாம் திருமணம் செய்து கொண்டு வெளியூருக்கு சென்று விடலாம் என்று கூறினேன். அதற்கு அவரும் தயாராக இருந்தார். ஆனால் தற்போது வேண்டாம் என்று மறுத்து வந்தார். இது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
மற்றொரு நாள் மகாராணியை பார்க்க சென்றபோது, அவருடைய தந்தை வீட்டில் இருந்தார். அவர் என்னை இங்கு வரக்கூடாது என்று கூறினார். இதனால் மகாராணி என்னை விட்டு சென்று விடுவாரோ என்ற பயம் எனக்குள் வந்தது. சம்பவத்தன்று காலையில் மகாராணி வீட்டுக்கு சென்றேன். அப்போது, நாம் திருமணம் செய்து கொள்வோம், அல்லது 2 பேரும் தற்கொலை செய்து கொள்வோம் என்று கூறினேன். அதற்கு அவர், தற்போது திருமணம் செய்து கொள்ள முடியாது என்று மறுத்து விட்டார்.
இதனால் வீட்டில் இருந்த பிளேடால் என் கையை அறுத்துக்கொண்டேன். பின்னர் அவரது கையையும் அறுத்தேன். அதனை அவர் தடுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நான், அவரது கழுத்தில் பிளேடால் பல முறை அறுத்தேன். ரத்தம் அதிக அளவில் வெளியேறியதால் நான் அங்கிருந்து வெளியே வந்து விட்டேன். பின்னர் எனது வீட்டுக்கு சென்று புதிய சட்டையை மாற்றிக்கொண்டு, மோட்டார் சைக்கிளில் தென்காசியில் உள்ள உறவினர் வீட்டுக்கு புறப்பட்டேன். பின்னர் போலீசுக்கு பயந்து கோர்ட்டில் சரண் அடைந்தேன். இவ்வாறு கூறியுள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo