Onetamil News Logo

அத்யாவசிய பொருட்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் பலசரக்கு சாமான்கள் மொத்த விற்பனையாளர்கள் ஆகியோர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் ;கட்டுப்பாட்டு அறை எண் 0461 - 2340101 ஆகிய எண்ணிலும் அல்லது காவல் கட்டுப்பாட்டு அறை எண் 9514144100 மொபைல் எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம

Onetamil News
 

உற்பத்தியாளர்கள் மற்றும் பலசரக்கு சாமான்கள் மொத்த விற்பனையாளர்கள் ஆகியோர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் ;கட்டுப்பாட்டு அறை எண் 0461 - 2340101 ஆகிய எண்ணிலும் / காவல் கட்டுப்பாட்டு அறை எண் 9514144100 மொபைல் எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம்.   


                                                                                                                                   

தூத்துக்குடி,2020 ஏப்.4:தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அத்யாவசிய பொருட்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் பலசரக்கு சாமான்கள் மொத்த விற்பனையாளர்கள் ஆகியோர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ  தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் கெரோனா தடுப்பு விழிப்புணர்வு 144 தடை உத்தரவின் காரணமாக பொதுமக்களுக்கு அத்யாவசிய பொருட்கள் சிரமமின்றி கிடைக்கும் வகையில்; அத்யாவசிய பொருட்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் பலசரக்கு சாமான்கள் மொத்த விற்பனையாளர்கள் ஆகியோர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ அவர்கள் தலைமையில் இன்று (04.04.2020) நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  முன்னிலை வகித்தார். 
கூட்டத்தில்  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் பேசியதாவது:- 
தமிழகத்தில் கொரோனா காய்ச்சல் பாதிப்பினை தடுக்கும் வகையில் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் பொதுமக்களுக்கு தேவையான அத்யாவசிய உணவு பொருட்கள் தங்கு தடையின்றி கிடைத்திட அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  உப்பு, எண்ணெய் வகைகள், உளுந்து, அரிசி உள்ளிட்ட பல்வேறு அத்யாவசிய உணவு பொருட்கள் உற்பத்தியாளர்கள் தங்களது உற்பத்தியை தொய்வின்றி தொடர்ந்து செய்திட தேவையான உதவிகளை தமிழக அரசம், மாவட்ட நிர்வாகமும் செய்யும்.  நமது மாவட்டத்தில் உள்ள 26 அரிசி ஆலைகளில் 24 ஆலைகள் இயங்கி வருகிறது.  எண்ணெய் உற்பத்தி ஆலைகளில் 60 சதவீதத்திற்கு மேல் இயங்கி வருகிறது.  பிரட் உற்பத்தி செய்பவர்கள் 75 சதவீதம் உற்பத்தி செய்கின்றனர்.  நமது மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு மட்டுமின்றி அருகில் உள்ள மாவட்டத்திற்கும் அனுப்புவதற்கு எவ்வித தடையும் இல்லை. இதில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கட்டுப்பட்டு அறை எண் 0461 - 2340101 ஆகிய எண்ணிலும் அல்லது காவல் கட்டுப்பாட்டு அறை எண் 9514144100 மொபைல் எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம்.  மேலும் ஆலை அதிபர்களுக்கு பணியாளர்கள் வருகைக்கு தேவையான பாஸ்களும் வழங்கப்படும்.  பலசரக்கு சாமான்கள் மொத்த விற்பனையாளர்கள்  வெளி மாவட்டத்தில், வெளி மாநிலத்தில் இருந்து வரும் பொருட்கள் வர நடவடிக்கை எடுக்கப்படும்.  எனவே அனைத்து வியாபாரிகளும் தடை உத்தரவுக்கு முன்பு இருந்த விலைக்கே பொருட்களை  விற்பனை செய்ய வேண்டும்.  உணவகங்களை திறந்து வைத்து பார்சல்களாக வழங்குவதற்கு அனுமதி உண்டு. எண்ணெய் உற்பத்தி ஆலைக்கு தேவையான  எண்ணெய் வித்துகள் வெளி மாவட்டம், வெளி மாநிலத்தில் இருந்து கொண்டு வர தேவையான உதவிகள் செய்யப்படும். மாநில அளவில் உதவிட நடவடிக்கை எடுக்கப்படும். முக்கிய உணவு பொருட்கள் கொண்டு செல்லும் லாரிகளில் அத்யாவசிய பொருட்கள் அல்லது உணவு பொருட்கள் அவசரம் என ஸ்டிக்கர் செய்து ஒட்டிக்கொண்டு கொண்டு செல்லலாம்.  லாரி டிரைவர்களுக்கு செல்லும் வழிகளில் உணவு கிடைக்கும் வகையில் ஓட்டல்கள் திறக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். நமது மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பான நடவடிக்கையால் பொதுமக்களுக்கு கொரோனா பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது.  மாநாடு சென்று வந்தவர்களுக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உள்ளது.  எனவே பொதுமக்கள் அரசின் வழிகாட்டுதலை முழுமையாக பின்பற்றி நமது மாவட்டத்தில் கொரோனா தொற்று ஏற்படாமல் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பேசினார்.    
கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது:
தமிழக அரசு கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.  பொதுமக்களுக்கு அத்யாவசிய பொருட்கள் கிடைப்பதற்காகவும் நடவடிக்கை எடுக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.  அதனடிப்படையில் பொதுமக்களுக்கு உணவு பொருட்களான அரிசி, சமையல் எண்ணெய், பருப்பு உள்ளிட்ட சிரமமின்றி கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.  காய்கறி மார்கெட் பகுதிகளை விசாலமான உள்ள இடங்களுக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டு பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  பலசரக்கு சாமான்கள் பொதுமக்களுக்கு தடையின்றி கிடைக்க மொத்த விற்பனையாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிமாநிலம், வெளிமாவட்டத்தில் இருந்து வருகை தரும் மளிகை சாமான்கள் கொண்டு வருவதில் சிக்கல்கள் ஏதும் இருந்தால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.  குறிப்பாக உப்பு, சமையல் எண்ணெய் உட்பட பல்வேறு நிறுவன உற்பத்தியாளர்கள் முழு கொள்ளவு உற்பத்தி செய்ய மாவட்ட நிர்வாகம் தங்களுக்கு தேவையான உதவிகளை செய்ய தயார் நிலையில் உள்ளது.  மேலும், நமது மாவட்டத்தில் இருந்து வெளி மாநிலம் அல்லது மாவட்டத்திற்கு உற்பத்தி பொருட்களை கொண்டு செல்ல தேவையான உதவிகள் அனைத்தும் செய்யப்படும்.  உற்பத்தி நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை வேன் மூலம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.  உற்பத்திக்கு தேவையான அட்டை பெட்டி நிறுவனங்களும் மற்றும் பேக்கிங் மெட்டிரியல்ஸ் நிறுவனங்களும் இயங்க அனுமதி வழங்கப்படும்.  பொதுமக்களுக்கு தேவையான மளிகை சாமான்கள் சரியான விலையில் தட்டுப்பாடின்றி பொருட்கள் கிடைக்க உங்களது முழு ஒத்துழைப்பு அவசியம் ஆகும்.  மாவட்ட நிர்வாகம் உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயார் நிலையில் உள்ளது என பேசினார். 
கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பால கோபாலன், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணுசந்திரன்,  மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன்,  தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரோன் ஜீத் சிங் காலோன்,  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மாரியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo