Onetamil News Logo

ஒன்டிவீரன் நினைவு நாள் விழா ;தூத்துக்குடிக்கு சபாநாயகர் வருகை ;அமைச்சர்கள் சிறப்பான வரவேற்பு வழங்குகின்றனர்.

Onetamil News
 

ஒன்டிவீரன் நினைவு நாள் விழா ;தூத்துக்குடிக்கு சபாநாயகர் வருகை ;அமைச்சர்கள் சிறப்பான வரவேற்பு வழங்குகின்றனர்.


தூத்துக்குடி 2019 ஆகஸ்ட் 19 ;திருநெல்வேலி மாவட்டம் சுதந்திர போராட்ட வீரர் ஒன்டிவீரன் அவர்களின் நினைவு நாள் விழாவில் சபாநாயகர்  கலந்துகொண்டு சுதந்திர போராட்ட வீரர் ஒன்டிவீரன்  அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்கள் - 
தூத்துக்குடி வடக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக செயலாளர் / செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தகவல் தெரிவித்துள்ளார்.
 அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது.. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர போராட்ட தியாகிகள் அவர்களின் நினைவு நாளினை கொண்டாடும் வகையில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்கள் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. 
 புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசின் சார்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறும் சுதந்திர போராட்ட வீரர் ஒன்டிவீரன் அவர்களின் நினைவு நாள் விழாவில் கலந்துகொள்ள  சபாநாயகர் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு பகல் 12 மணிக்கு வருகை தரவுள்ளார்கள். 
விமான நிலையத்திற்கு வருகை தரும் சபாநாயகர் -யை  வரவேற்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க. செயலாளர் / செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ ,  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோர் தலைமையில் சிறப்பாக நடைபெற உள்ளது. 
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க. செயலாளர்/ திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன் , விளாத்திகுளம்  சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன்  ஆகியோர்கள் வரவேற்க உள்ளார்கள். 

மேலும், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், ஒன்றிய செயலாளர்கள், கிளை செயலாளர்கள், முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் வரவேற்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளார்கள். மேலும், சபாநாயகர் அவர்களை வரவேற்கும் நிகழ்ச்சியில் கழக உறுப்பினர்கள், பொதுமக்கள் அதிக அளவில் வருகை தந்து சிறப்பிக்க வேண்டும் என தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க. செயலாளர் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ  கேட்டுக்கொண்டுள்ளார். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo