Onetamil News Logo

எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ அறிக்கை ;தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் -2019 அஇஅதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட அனுமதி கோரும் விருப்ப மனு பெறும் பணி   

Onetamil News
 

எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ அறிக்கை ;தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் -2019 அஇஅதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட அனுமதி கோரும் விருப்ப மனு பெறும் பணி   


தூத்துக்குடி 2019 நவம்பர் 12 ;தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ அறிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பணியினை அ.இ.அதிமுக தலைமை முடுக்கிவிட்டுள்ளது. அதனடிப்படையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தமிழக முதல்வர் டாக்டர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் தலைமைக்கழக அறிவிப்பின்படி அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்பமனு கோருபவர்கள் வருகிற 15.11.2019(வெள்ளிக்கிழமை) மற்றும் 16.11.2019 (சனிக்கிழமை) ஆகிய தேதிகளில் காலை 10.00முதல் மாலை 5.00 மணி வரை முறையே அந்தந்த மாவட்ட கழகங்களில் உரிய கட்டணத் தொகையை செலுத்தி விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் எனது தலைமையில் மனுக்களை வருகிற 15 மற்றும் 16ம் தேதிகளில் தூத்துக்குடி டூவிபுரம் 7வது தெருவில் உள்ள தூத்துக்கு தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் வைத்து விருப்ப மனு வழங்கப்படுகிறது. உரிய கட்டணத் தொகையை செலுத்தி விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை வழங்கலாம். கட்டணத்தொகை முறையே, மாநகராட்சி மேயர் பதவிக்கு ரூ.25ஆயிரமும், மாநகராட்சி வார்டு மாமன்ற கவுன்சிலர் பதவிக்கு ரூ.5ஆயிரமும், நகர மன்ற தலைவர் பதவிக்கு ரூ.10ஆயிரமும், நகர மன்ற வார்டு கவுன்சிலர் பதவிக்கு ரூ.2500ம் பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ரூ.5ஆயிரமும், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.1500ம் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு ரூ.5ஆயிரமும், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 3ஆயிரமும், கட்டணத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்பினை தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் மற்றும் திருச்செந்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட கழகத்தினர் பயன்படுத்திக்கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo