Onetamil News Logo

தூத்துக்குடி கப்பல் இஞ்ஜினீயர் உட்பட 2 பேர் கொலையில் இரண்டு பேர் கைது 

Onetamil News
 

தூத்துக்குடி கப்பல் இஞ்ஜினீயர் உட்பட 2 பேர் கொலையில் இரண்டு பேர் கைது 


தூத்துக்குடி 2019 செப் 15 ;தூத்துக்குடி கப்பல் என்ஜினீயர் உட்பட 2 பேர் கொலையில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.மேலும் அந்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தூத்துக்குடி சிவந்தாகுளம் 2-வது தெருவை சேர்ந்த கப்பல் என்ஜினீயர். முருகேசன் (வயது 40),  இவருடைய மனைவி இந்திரகுமாரி. இவர் டெல்லியில் உள்ள ஒரு நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த கோவில் கொடை விழாவுக்காக அவர் விடுமுறையில் ஊருக்கு வந்து உள்ளார்.முருகேசன் கடந்த சில மாதங்களாக பணிக்கு செல்லாமல் இருந்து வந்தார். நேற்று மதியம் இவர் தெருவில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு வாலிபர் தனது மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றார். இதனை பார்த்த முருகேசன், அந்த நபரை பார்த்து, தெருவுக்குள் மெதுவாக செல்லுமாறு கூறி சத்தம் போட்டார். இதையடுத்து அந்த வாலிபர் அங்கிருந்து சென்று விட்டார்.
நேற்று மாலையில் முருகேசன் சிவந்தாகுளம் மாரியம்மன் கோவில் அருகே நின்று கொண்டு இருந்தார். அவர், அங்கு வந்த ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் தனது நண்பரான பிரையண்ட்நகர் 9-வது தெருவை சேர்ந்த விவேக் (40) என்பவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிள்களில் 7 பேர் வந்தனர். அவர்கள் திடீரென முருகேசன், விவேக் ஆகியோரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் 2 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தனர். பின்னர் அந்த 7 பேர் கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது.ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த 2 பேரையும் அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே முருகேசன் பரிதாபமாக இறந்தார். விவேக் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, சிறிது நேரத்தில் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இதை அறிந்த 2 பேரின் உறவினர்கள் ஆஸ்பத்திரியில் குவிந்தனர். 
இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன், நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ், தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
தூத்துக்குடியில் நடந்த இரட்டை கொலை சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இச்சம்பவம் குறித்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தீவிர விசாரணை நடத்திய போலீசார் பிரையண்ட் நகரை சார்ந்த மாரிச்செல்வம் (25),சத்யா நகரில் வைத்து போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை  தாளமுத்துநகர் பகுதியில் வாகன தணிக்கையின்போது தூத்துக்குடி 3 சென்ட் பகுதியை சார்ந்த முத்துராஜ் மகன் மாரிமுத்து (20),வை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 5 பேரை  தென்பாகம் போலீசார் தேடி வருகின்றனர்.இதுகுறித்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கொலையாளிகளை பிடிப்பதற்காக போலீசார் 4 தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.  
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo