Onetamil News Logo

தூத்துக்குடி ஊரக  டி.எஸ்.பி.கலைக்கதிரவன் பாராட்டு ; சுய ஊரடங்கு உத்தரவை மதித்து நடந்த பொதுமக்களுக்கு நன்றி ; 100% ஊரடங்கு  உத்தரவு வெற்றி 

Onetamil News
 

தூத்துக்குடி ஊரக  டி.எஸ்.பி. கலைகதிரவன் பாராட்டு ; சுய ஊரடங்கு உத்தரவை மதித்து நடந்த பொதுமக்களுக்கு நன்றி ; 100% ஊரடங்கு  உத்தரவு வெற்றி 


தூத்துக்குடி 22 மார்ச் 2020 ஞாயிற்றுக்கிழமை  ;தூத்துக்குடியில் சுய ஊரடங்கு உத்தரவை மதித்து நடந்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்த  ஊரக  டி.எஸ்.பி.கலைக்கதிரவன் பாராட்டு ; 100% ஊரடங்கு  உத்தரவு வெற்றி பெற்றுள்ளதாக அவர் கூறினார்.
தூத்துக்குடி ஊரக காவல் நிலைய பகுதி பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் பற்றியும் ,மார்ச் 22ம் தேதி வீட்டை விட்டு வெளியே வரக்கூடாததை தெளிவான விளக்கத்துடன்  விழிப்புணர்வு தகவல் வாகனத்தை நேற்று தூத்துக்குடி ஊரக துணை காவல் கண்காணிப்பாளர் பி.கலைக்கதிரவன் தொடங்கி வைத்தார்.  இந்த வாகனத்திற்கு பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு  வழங்கினார்கள்.முன்னதாக  இந்த விழிப்புணர்வு வாகனத்தை தூத்துக்குடி ஊரக டி.எஸ்.பி.கலைக்கதிரவன் தொடங்கிவைத்தார். 
இந்த நிலையில் தூத்துக்குடி ஊரகப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள்,மருத்துவர்கள், அரசு அலுவலர்கள், ஊடகத் துறையினர் உட்பட அனைவரும்  இன்று மார்ச் 22ம் தேதி காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினார்கள். அதனால்  தூத்துக்குடி ஊரக துணை காவல் கண்காணிப்பாளர் பி.கலைக்கதிரவன்  அனைவருக்கும் நன்றியும் பாராட்டும் தெரிவித்தார். மேலும் இந்த ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை நீடிக்கும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். அதற்கும்  பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
                                                                              
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo