Onetamil News Logo

புதியம்புத்தூரில் நடைபெற்ற மனுநீதி நாள் நிகழ்ச்சியில் 148 பயனாளிகளுக்கு ரூ.52.71 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,வழங்கினார்.   

Onetamil News
 

புதியம்புத்தூரில் நடைபெற்ற மனுநீதி நாள் நிகழ்ச்சியில் 148 பயனாளிகளுக்கு ரூ.52.71 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,வழங்கினார்.   


தூத்துக்குடி 2019 பிப்ரவரி 13 ;தூத்துக்குடி மாவட்டம்; ஓட்டப்பிடாரம் வட்டம் புதியம்புத்தூரில் நடைபெற்ற மனுநீதி நாள் நிகழ்ச்சியில் 148 பயனாளிகளுக்கு ரூ.52.71 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,வழங்கினார்.
     தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் புதியம்புத்தூர் சமுதாய நலக்கூடத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தலைமையில் இன்று (13.02.2019) நடைபெற்றது. இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொது மக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக்கொண்டார். மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி உடன் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது:-
தமிழக அரசின் உத்தரவிற்கிணங்க ஒவ்வொரு மாதமும் தொலைதூர கிராம பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் மனுநீதி நாள் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இம்முகாம்கள் நடத்தப்படுவதன் நோக்கம் அரசின் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து விழிப்புணர்வு பெற்று அவைகளை பெற வேண்டும் என்பதுதான்.  மேலும் பொதுமக்கள் அரசு அலுவலகத்தை தேடி வந்து சிரமப்படாமல் மாவட்ட ஆட்சித்தலைவர் உட்பட அனைத்து அரசு அலுவலர்களும் கிராமங்களுக்கு வருகை தந்து பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை பெற்று நிறைவேற்றுவதுதான் மனுநீதிநாள் முகாம் ஆகும்.  இம்மனுநீதி நாள் நடைபெறுவதையொட்டி முன்னதாக இப்பகுதியில் 201 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இதில் 46 மனுக்களுக்கு இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. 155 மனுக்கள்; மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்று நடைபெறும் விழாவில் வருவாய் துறையின் மூலம் 87 பயனாளிகளுக்கு ரூ.11.92 இலட்சம் மதிப்பிலும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் 34 நபர்களுக்கு ரூ.0.53 இலட்சம் மதிப்பிலும், மகளிர் திட்டத்தின்கீழ் 22 நபர்களுக்கு ரூ.39.70 இலட்சம் மதிப்பிலான கடனுதவிகளும், வேளாண்மைத்துறையின் மூலம் 5 நபர்களுக்கு ரூ.56,600/- மானியத்திலான நலத்திட்ட உதவிகளும் என மொத்தம் 148 நபர்களுக்கு ரூ.52.71 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. 
சிறு, குறு விவசாயிகளுக்கு பிரதம மந்திரியின் விவசாயிகள் கௌரவ ஊக்கத்தொகை (PM-KISAN) திட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ.6,000 வழங்குதற்கான பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இத்தொகை 4 மாதங்களுக்கு ரூ.2000ம் என மூன்று முறை வழங்கப்படவுள்ளது. தகுதியுள்ள விவசாயிகள் அனைவரும் அவசியம் உடனடியாக பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் இந்திய தேர்தல் ஆணையம்  எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரத்துடன் வாக்காளர் ஒப்புகை சீட்டு இயந்திரம்(VVPAT); ; பயன்படுத்தப்பட உள்ளது. இதில் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அவர்களே தெரிந்துகொள்ளும் வகையில் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களுக்கிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து வாக்குச்சாவடி மையத்திலும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. 18 வயது பூர்த்தியடைந்த இளம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காமல் இருந்தால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பங்களை அளிக்க வேண்டும். வாக்காளர்கள் அனைவரும் அவசியம் வாக்களிக்க வேண்டும். நேர்மையாக வாக்குப்பதிவு செய்து ஜனநாயக உரிமையை நிலைநாட்ட வேண்டும். புதியம்புத்தூர் பகுதியில் நீட்ஸ் உள்ளிட்ட திட்டங்களில் அதிகமான கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தேவையான தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பித்தால் கடன் உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் இப்பகுதிக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தேவைப்படும் இடங்களில் மேம்படுத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசினார். 
முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, , முகாமில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், மகளிர் திட்டம், வேளாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலமாக வைக்கப்பட்டிருந்த கண்காட்சியினை பார்வையிட்டார். மேலும், வருவாய் துறை மூலம் வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் ஒப்புகை சீட்டு இயந்திரம் (VVPAT); விழிப்புணர்வு பணிகளையும் பார்வையிட்டார்.
இம்முகாமில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் விஜயா, துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சங்கரநாராயணன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் திட்ட அலுவலர் முத்து லெட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பாலசுப்பிரமணியன், துணை இயக்குநர் சுகாதார பணிகள்(கோவில்பட்டி) மரு.போஸ்கோ ராஜா, மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் கண்ணன், ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல அலுவலர் தமிழ்செல்வி, வருவாய் வட்டாட்சியர் காளிராஜ் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo