Onetamil News Logo

தமிழகத்திலேயே முதன் முறையாக தூத்துக்குடியில் திருநங்கை திருமணம் பதிவு செய்யப்பட்டது.

Onetamil News
 

தமிழகத்திலேயே முதன் முறையாக தூத்துக்குடியில் திருநங்கை திருமணம் பதிவு செய்யப்பட்டது.


தூத்துக்குடி,2019 மே.20 ; தமிழகத்திலேயே முதன் முறையாக தூத்துக்குடியில் திருநங்கை திருமணம் பதிவு செய்யப்பட்டது.
                                                                                                                                       தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டத்தின் கீழ் மூன்றாம் பாலினத்தவர்களுக்குள் திருமணம் நடந்தால் அந்தத் திருமணம் சட்டப்பூர்வமாக ஆன்லைன் (கணினியில்) பதிவு செய்வதற்கு இதுவரையில்
தமிழக அரசால் வழிவகை செய்யப்படவில்லை. தூத்துக்குடி, சங்கரப்பேரி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீஜா என்ற திருநங்கையும், டீ.அருண்குமார் என்ற இருவரும் கடந்த 31.10.2018ம் தேதியில் 'அருள்மிகு சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில்' வைத்து இந்து திருமண முறைப்படி திருமணம் செய்துக் கொண்டார்கள்.
இந்த திருமணத்தை சட்டப்பூர்வமாக பதிவு செய்வதற்காக தூத்துக்குடி மாவட்டப் பதிவாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட தூத்துக்குடி 2 நிர் இணை சார் பதிவாளர் அவர்கள் முன்பு பதிவு செய்வதற்கு வசதி செய்யப்படாத காரணத்தினால் அப்போது அத்திருமணத்தை பதிவு செய்ய இயலாமல்
போய்விட்டது.
இதைத் தொடர்ந்து தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன் அவர்கள் மூலமாக தூத்துக்குடி மாவட்டப் பதிவாளர் (நிர்வாகம்) அவர்களிடம் மேல்முறையீடு செய்தும், இத்திருமணப் பதிவு சட்டச் சிக்கல்கள் மற்றும் ஆன்லைனில் உள்ள குளறுபடிகள் காரணமாக சென்னை மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் நீதிப் பேரானை வழக்குத் தொடர்ந்ததில் நீதிபதி சுவாமிநாதன் வழங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிகுந்த தீர்ப்பாணையின் அடிப்படையில் தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக தூத்துக்குடி மாவட்டத்தில் 2 நிர் இணை சார் பதிவாளர் அவர்களால் 20.05.2019 இன்று ஸ்ரீஜா – அருண்குமார் இருவருக்கும் சட்டப்பூர்வமாக ஆன்லைனில் திருமணம் பதிவு செய்யப்பட்டுள்ளது.மூன்றாம் பாலினருக்கும், திருமணம், தத்தெடுப்பு அதிகாரம் போன்ற அனைத்து உரிமைகளும் உள்ளன என்பதை இந்தத் திருமணம் உறுதி செய்கின்றது.இத் திருமணத்திற்கான ஏற்பாடுகள் தமிழ்நாடு பத்திரம் எழுதும் சங்கத்தின் மாநில இணைச் செயலாளர் கண்ணன் (எ) சிவசங்கரராமன்,லோட்டஸ் டி.வி  செய்தியாளர் செந்தில் முருகன், சமூக ஆர்வலர் முருகன்
ஆகியோர் செய்திருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo